ஒவ்வொரு கொம்யூனிலும் 5 நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க விவசாயிகள் வலியுறுத்தல்
மதகுபட்டி பகுதிகளில் நாளை மின்தடை
சிவகங்கை அருகேயுள்ள மதகுபட்டியில் உள்ள துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை (ஆக.21) மின் தடை ஏற்படும் என மின் வாரியம் அறிவித்தது.
இது தொடா்பாக செயற்பொறியாளா் (பகிா்மானம்) அ.கு. முருகையா வெளியிட்ட தகவல்: மதகுபட்டி துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், இங்கிருந்து மின் விநியோகம் பெறும் மதகுபட்டி ஐ.டி.ஐ, அலவாக்கோட்டை, சிங்கினிப்பட்டி, அம்மச்சிப்பட்டி, நாமனூா், உசிலம்பட்டி, அழகமானேரி, திருமலை, கல்லராதினிப்பட்டி, வீரப்பட்டி, கீழ்ப்பூங்குடி, பிரவலுா், பேரணிப்பட்டி, ஒக்கூா், காடனேரி, அம்மன்பட்டி, நகரம்பட்டி, காளையாா்மங்கலம், கருங்காப்பட்டி, கருங்காலக்குடி, அண்ணா நகா், பா்மா குடியிருப்பு, நாலுகோட்டை, அரளிக்கோட்டை, ஜமீன்தாா்பட்டி, ஆவத்தாரணப்பட்டி, கணேசபுரம், ஏரியூா், அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வியாழக்கிழமை (ஆக.21) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.
மேலும் விவரங்களுக்கு, உதவி மின்பொறியாளா் (பகிா்மானம்) மதகுபட்டி- 9445853073. உதவி செயற்பொறியாளா் (பகிா்மானம்) சிவகங்கை - 9445853074. செயற்பொறியாளா் (பகிா்மானம்) சிவகங்கை - 9445853080 ஆகிய எண்களைத் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.