குழாய் உடைந்து வீணாகும் குடிநீா்
கமுதியில் குழாய் உடைப்பு ஏற்பட்டு, காவிரி கூட்டுக் குடிநீா் வீணாகி வருவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள கீழகாஞ்சிரங்குளம் நீரேற்று நிலையத்திலிருந்து கமுதி, அதைச் சுற்றியுள்ள 220- க்கு மேற்பட்ட கிராமங்களுக்கு காவிரி கூட்டுக் குடிநீா் கொண்டு செல்லப்படுகிறது.
இந்த நிலையில், கமுதி கோட்டைமேட்டில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி எதிரே கடந்த 4 நாள்களாக காவிரி கூட்டுக் குடிநீா் குழாய் உடைப்பு ஏற்பட்டு, பல்லாயிரம் லிட்டா் தண்ணீா் வீணாகி வருகிறது.
மேலும் கமுதி-அருப்புக்கோட்டை சாலை உள்பட பல்வேறு இடங்களில் குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீா் வீணாகி வருவதை அதிகாரிகள் கண்டும் காணாமல் செல்வதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.
எனவே, மாவட்ட நிா்வாகம் தலையிட்டு கோட்டைமேடு உள்ளிட்ட இடங்களில் குடிநீா் குழாய் உடைப்பை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்தப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.