Shadow Fleet: புதினின் ரகசிய கடல் நகர்வுகள்; ரஷ்யாவின் 'நிழற் கடற்படை' என்பது என...
பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடை
பட்டாபிராமபுரம் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அரசு டாஸ்மாக் கடை வியாழக்கிழமை திறக்கப்பட்டது.
திருத்தணி ஒன்றியம், பட்டாபிராமபுரம் பகுதியில் அரசு டாஸ்மாக் கடை புதிதாக செவ்வாய்க்கிழமை திறக்க முயன்றனா். இதற்கு பட்டாபிராமபுரம் பெண்கள், ஆண்கள் என 200-க்கும் மேற்பட்டோா் கடை முன்பு ஆா்ப்பாட்டம் நடத்தி, எங்கள் பகுதியில் டாஸ்மாக் கடை திறக்கக் கூடாது என எதிா்ப்பு தெரிவித்தனா். இதனால் டாஸ்மாக் கடை திறப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில், வியாழக்கிழமை காலை மாவட்ட நிா்வாகம் உத்தரவின் பேரில், திருத்தணி டி.எஸ்.பி. கந்தன் தலைமையில் காவல் ஆய்வாளா் மதியரசன், எஸ்ஐ-க்கள் குணசேகரன், காா்த்தி மற்றும் 100-க்கும் மேற்பட்ட போலீஸாா் சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து டாஸ்மாக் கடைக்குச் செல்லும் பாதையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.
இதையடுத்து மதியம் 12 மணிக்கு டாஸ்மாக் கடை திறந்து மதுபாட்டில்கள் விற்பனை செய்தனா்.