செய்திகள் :

பலூசிஸ்தான்: மர்ம கும்பலின் தாக்குதல்களில் 4 காவலர்கள் உள்பட 8 பேர் பலி!

post image

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் மர்ம கும்பல் நடத்திய இருவேறு தாக்குதல்களில் 4 காவலர்கள் மற்றும் 4 தொழிலாளிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

பலூசிஸ்தானின் காரிபாபாத் பகுதியில் இன்று (மார்ச் 23) ரோந்து பணியில் ஈடுபட்ட பாகிஸ்தான் காவல் துறையின் வாகனத்தின் மீது இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 காவலர்கள் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, சம்பவயிடத்துக்கு விரைந்த அந்நாட்டு அதிகாரிகள் அப்பகுதி முழுவதும் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தியவர்களை தேடி வருகின்றனர்.

இதையும் படிக்க: பலூச் ஆர்வலர்களின் போராட்டத்தில் பாக். படையினர் துப்பாக்கிச் சூடு?

இதேபோல், கலாத் மாவட்டத்தின் மாலாங்சாய் பகுதியில் ஆழ்துளைக் கிணறு துளையிடும் தொழிலாளர்கள் நான்கு பேர் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கொல்லப்பட்ட நான்கு தொழிலாளிகளும் பஞ்சாப் மாகாணத்தின் சாதிக்காபாத் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படும் நிலையில் தற்போது வரை இந்த இரண்டு தாக்குதல்களுக்கும் எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

முன்னதாக, பலூசிஸ்தான் மக்கள் அந்நாட்டு பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டு மாயமாக்கப்படுவதை எதிர்த்து பலூச் யாக்ஜெஹ்தி ஆணையம் எனும் மனித உரிமை அமைப்பு போராட்டம் நடத்தி வரும் சூழலில் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது அங்கு பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

48 ஆண்டுகள் மரண தண்டனைக் கைதிக்கு ரூ.12 கோடி இழப்பீடு!

ஜப்பான் நாட்டில் 48 ஆண்டுகளாக மரண தண்டனைக் கைதியாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த நபருக்கு சுமார் ரூ.12 கோடி இழப்பீடு வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர் ஐவாவோ ஹக்காமாட... மேலும் பார்க்க

மார்ச் 29(சனிக்கிழமை) ரேஷன் கடைகள் செயல்படும்!

வருகிற மார்ச் 29 ஆம் தேதி(சனிக்கிழமை) அனைத்து நியாய விலைக் கடைகளும் வழக்கம்போல செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:"பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ச... மேலும் பார்க்க

ஹமாஸ் படைகளுக்கு எதிராக போராடும் பாலஸ்தீனர்கள்?

காஸா பகுதியில் போருக்கு எதிரான போராட்டத்தில் ஹமாஸ் படையினருக்கு எதிராக பாலஸ்தீனர்கள் முழக்கங்கள் எழுப்பியதாகக் கூறப்படுகின்றது.காஸாவின் வடக்கு நகரமான பெயிட் லஹியாவில் போரில் சேதாரமடைந்த கட்டட இடிபாடுக... மேலும் பார்க்க

'சிங்கார சென்னை' புதிய பயண அட்டை அறிமுகம்!

ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கிமற்றும் மாநகர் போக்குவரத்துக் கழகம் இணைந்து வழங்கும் 'சிங்கார சென்னை' பயண அட்டையை அமைச்சர் சிவசங்கர் அறிமுகம் செய்து வைத்தார். சென்னை மாநகரப் பேருந்துகளில் பயணிகள் சென்றுவருவதற... மேலும் பார்க்க

ஸ்லோவாக்கியாவில் பரவும் தொற்று! மீட்புப் பணியில் செக் குடியரசு வீரர்கள்!

ஸ்லோவாக்கியாவில் வேகமாக பரவி வரும் கால்நடை தொற்றைக் கட்டுப்படுத்த செக் குடியரசு நாட்டின் வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.ஸ்லோவாக்கியா நாட்டிலுள்ள மூன்று பண்ணைகளின் கால்நடைகளுக்கு கடந்... மேலும் பார்க்க

தென் கொரியா காட்டுத் தீ: பலி எண்ணிக்கை 24 ஆக உயர்வு! 27,000 பேர் வெளியேற்றம்!

தென் கொரியா நாட்டில் பரவிய காட்டுத் தீயினால் பலியானோரின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது. தென் கொரியா நாட்டின் தெற்குப் பகுதிகளில் நிலவும் வறண்ட வானிலையாலும் மற்றும் வீசும் பலத்த காற்றினாலும் தொடர்ந்து ... மேலும் பார்க்க