அனைத்துவிதமான வசதிகளுடன் இலவச ஏசி ஓய்வறை... சென்னை மாநகராட்சி திட்டம்!
பலூசிஸ்தான் ரயில் கடத்தல்: தீவிரவாதிகளின் கூட்டாளிகள் 4 பேர் கைது!
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் ரயில் கடத்தலில் ஈடுபட்ட தீவிரவாதிகளின் கூட்டாளிகள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பலூசிஸ்தான் மாகாணத்தில் கடந்த மார்ச் 11 அன்று தடைசெய்யப்பட்ட பலூச் லிபரேஷன் ஆர்மி எனும் அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் 440 பயணிகளுடன் சென்ற ஜாஃபர் விரைவு ரயிலை கடத்தி சிறைப் பிடித்தனர்.
இந்த கடத்தலில் 18 பாதுகாப்புப் படையினர் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர். பின்னர், பாகிஸ்தான் ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 33 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டு 300க்கும் மேற்பட்ட பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பலூசிஸ்தான் மாகாணத்தில் ஏராளமான தாக்குதல்கள் நடைபெற்று வந்த நிலையில், அம்மாகாண காவல் துறையினரின் தீவிரவாதத் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் ரயில் கடத்தலில் ஈடுபட்ட தீவிரவாதிகளுக்கு உதவியதாக அவர்களது கூட்டாளிகள் என சந்தேகிக்கப்படும் 4 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ரயில் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட தீவிரவாதிகள் பயன்படுத்திய ஆயுதங்கள் மற்றும் தொலைத்தொடர்பு சாதனங்கள் அனைத்தும் கைப்பற்றப்பட்டு தடயவியல் சோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. மேலும், அவர்களது கைரேகைகள் சேகரித்து அந்நாட்டு அதிகாரிகள் தீவிரவாதிகளை அடையாளம் காணும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளின் எல்லையில் அமைந்துள்ள பாகிஸ்தானின் வளமிக்க மாகாணமான பலூசிஸ்தானில் கடந்த சில ஆண்டுகளாக தீவிரவாதத் தாக்குதல்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: சூடான் ராணுவத் தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் பலி?