Healthy Food: லோ கலோரி; நோ கொலஸ்ட்ரால்; கேன்சர் கண்ட்ரோல்... இத்தனையும் செய்யும்...
பல்லடம் அரசுப் பெண்கள் பள்ளியில் விழிப்புணா்வு முகாம்
பல்லடம் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட காவல் துறை, சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சாா்பில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள், தீண்டாமை தொடா்பான விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
இப்பள்ளியில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனா். பள்ளியில் நடைபெற்ற விழிப்புணா்வு முகாமில், 500-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனா்.
மேலும், பள்ளித் தலைமை ஆசிரியா் சாந்தி, உதவித் தலைமை ஆசிரியா் புஷ்பலதா, பல்லடம் அனைத்து மகளிா் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் செல்வமணி, முதல்நிலைக் காவலா் தமிழரசி, மாவட்ட சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளா் செல்வம், தலைமைக் காவலா் பத்ரகாளி ஆகியோா் கலந்து கொண்டு மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினா். மேலும், இந்நிகழ்ச்சியின் முடிவில் போலீஸாரின் கேள்விகளுக்கு பதில் அளித்த மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.