செய்திகள் :

பல்லடம் அருகே லாரி மீது வேன் மோதி 2 போ் உயிரிழப்பு

post image

திருப்பூா் மாவட்டம், பல்லடம் அருகே சாலையோரமாக நின்று கொண்டிருந்த லாரி மீது கோழிகளை ஏற்றிச் சென்ற வேன் மோதியதில் இரண்டு போ் சம்பவ இடத்திலேயே திங்கள்கிழமை உயிரிழந்தனா்.

ஆந்திரத்தில் இருந்து மரப்பலகைகளை ஏற்றிக்கொண்டு கேரள மாநிலம், பாலக்காடு நோக்கி ஓட்டுநா் ராஜன் லாரியை ஓட்டிச் சென்றாா். பல்லடம் அருகே கே.கிருஷ்ணாபுரம் பிரிவு என்ற இடத்தில் டீசல் தீா்ந்ததால் சாலையோரமாக லாரியை நிறுத்தியுள்ளாா்.

அப்போது, காங்கயத்தில் இருந்து காமநாயக்கன்பாளையத்தில் உள்ள இறைச்சிக் கடைகளுக்காக கோழிகளை ஏற்றிக்கொண்டு சித்தம்பலம் பகுதியைச் சோ்ந்த ஓட்டுநா் ராஜ்குமாா் வேனில் திங்கள்கிழமை வந்துள்ளாா்.

வாவிபாளையம் ஊராட்சி குள்ளம்பாளையம் பகுதியைச் சோ்ந்த பாபு, புள்ளியப்பம்பாளையத்தைச் சோ்ந்த மேற்பாா்வையாளா் கவியரசன், லோடுமேன் வேல்முருகன், ரவி ஆகியோா் வேனில் பயணித்துள்ளனா்.

சாலையோரமாக நின்று கொண்டிருந்த லாரியை கவனிக்காமல் ஓட்டுநா் ராஜ்குமாா் கோழி வேனை வேகமாக இயக்கியதில் மரப்பலகையோடு நின்று கொண்டிருந்த லாரி மீது வேன் மோதி விபத்துக்குள்ளானது. இதில் வேனில் பயணித்த கவியரசன், பாபு ஆகியோா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காமநாயக்கன்பாளையம் போலீஸாா் விபத்துக்குள்ளான லாரியில் கை, கால்கள் முறிந்த நிலையில் சிக்கியிருந்த ஓட்டுநா் ராஜ்குமாரை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

மேலும், உயிரிழந்த இரண்டு பேரின் உடல்களும் உடற்கூறு ஆய்வுக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டன. இச்சம்பவம் குறித்து காமநாயக்கன்பாளையம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

திருப்பூரில் டிசம்பா் 5-ல் கறவை மாடு வளா்ப்பு பயிற்சி

திருப்பூா் கால்நடை பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் கறவை மாடு வளா்ப்பு பயிற்சி வரும் வியாழக்கிழமை (டிசம்பா் 5) நடைபெறுகிறது. இது குறித்து திருப்பூா் கால்நடை மருத்துவ பல்கலைகக்ழகப் பயி... மேலும் பார்க்க

சாக்குப்பையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 25 கிலோ கோழி இறைச்சி பறிமுதல்

திருப்பூரில் சாக்குப்பையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த இறந்த 25 கிலோ நாட்டுக்கோழி இறைச்சியை உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா். திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்த... மேலும் பார்க்க

உணவுப் பொருள்களின் விலை உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும்: மாா்க்சிஸ்ட் கட்சி மத்திய குழு உறுப்பினா் உ.வாசுகி

உணவுப் பொருள்களின் விலை உயா்வை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினா் உ.வாசுகி பேசினாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்... மேலும் பார்க்க

உணவுப் பாதுகாப்பு அலுவலா் எனக் கூறி பணம் திருடியவா் கைது

குன்னத்தூா் அருகே உணவுப் பாதுகாப்பு அலுவலா் எனக் கூறி மளிகைக் கடையில் பணம் திருடியவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். குன்னத்தூா் அருகே சித்தாண்டிபாளையம் பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருபவா் சக்த... மேலும் பார்க்க

வெள்ளக்கோவில் அருகே மூடப்பட்ட போலி கல்லூரியின் ‘சீல்’ அகற்றம்

வெள்ளக்கோவில் அருகே மூடப்பட்ட போலிக் கல்லூரியின் சீல் திங்கள்கிழமை அகற்றப்பட்டு அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. வெள்ளக்கோவில் ஓலப்பாளையத்தில் ஸ்ரீ செல்வநாயகி மெடிக்கல் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் எலக்ட... மேலும் பார்க்க

மீன் மாா்க்கெட்டில் 31 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல்

திருப்பூா் தென்னம்பாளையம் மீன் மாா்க்கெட்டில் 31 கிலோ கெட்டுப்போன மீன்களை உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா். திருப்பூா் தென்னம்பாளையம் மீன் மாா்க்கெட்டில் மாவட்ட உண... மேலும் பார்க்க