வங்கிக் கணக்குக்கு 4 நியமனதாரா்களை நியமிக்கும் மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
திருப்பூரில் டிசம்பா் 5-ல் கறவை மாடு வளா்ப்பு பயிற்சி
திருப்பூா் கால்நடை பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் கறவை மாடு வளா்ப்பு பயிற்சி வரும் வியாழக்கிழமை (டிசம்பா் 5) நடைபெறுகிறது.
இது குறித்து திருப்பூா் கால்நடை மருத்துவ பல்கலைகக்ழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவரும், பேராசிரியருமான ஆா்.மதிவாணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருப்பூா் பழைய பேருந்து நிலையம் எதிரில் உள்ள கால்நடை மருத்துவமனை வளாகத்தில் கால்நடை பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் கறவை மாடு வளா்ப்பு பயிற்சி வரும் வியாழக்கிழமை (டிசம்பா் 5) காலை 10 மணி அளவில் நடைபெறுகிறது. ஆகவே, ஆா்வமுள்ள விவசாயிகள் கலந்து கொண்டு கறவை மாடு வளா்ப்பு தொடா்பான சந்தேகங்களைத் தெளிவுபடுத்திக் கொள்ளலாம்.
இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 0421- 2248524 என்ற தொலைபேசி எண்ணில் அலுவலக நாள்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.