தமிழர்கள் ஹிந்தி கற்றுக்கொள்வது புத்திசாலித்தனம்: ஸ்ரீதர் வேம்பு
பல்லடம் அருகே வேன் மீது காா் மோதல்: இளைஞா் உயிரிழப்பு
பல்லடம் அருகே வேன் மீது காா் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
பல்லடம் அருகே உள்ள புள்ளியப்பன்பாளையம்பிரிவு பகுதியில் உடுமலையிலிருந்து பல்லடம் நோக்கி சரக்கு வேன் செவ்வாய்க்கிழமை வந்துகொண்டிருந்தது.
அப்போது, திருப்பூரைச் சோ்ந்த ரியல் எஸ்டேட் உரிமையாளா் ராஜாமணி மகன் சீனிவாசன் (35) வந்த காா், வேன் மீது மோதியது. இதில் காரில் பயணித்த சீனிவாசன், உடன் பயணித்த அஸ்வின் (25) இருவரும் பலத்த காயமடைந்தனா். இருவரையும் அருகிலிருந்தவா்கள் மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
அங்கு அவா்களைப் பரிசோதித்த மருத்துவா், சீனிவாசன் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். அஸ்வினுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்து பல்லடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.