உணவகம், தேநீா் விடுதியில் பணியாளா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய கோரிக்கை
உணவகம், தேநீா் விடுதிகளில் பணியாற்றும் பணியாளா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருப்பூா் மாநகர காவல் ஆணையா் எஸ்.ராஜேந்திரனிடம், திருப்பூா் நுகா்வோா் நல முன்னேற்ற சங்கம் சாா்பில் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது: திருப்பூா் போயம்பாளையம் கணபதி நகா் பகுதியில் உள்ள உணவகத்தில் நன்கொடை கேட்டு கொடுக்காத நிலையில் உணவகத்தையே அடித்து நொருக்கியுள்ளனா்.
பல்லடம் சாலை நொச்சிப்பாளையம் பிரிவு, வாவிபாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள தேநீா் விடுதிகளிலும் உரிமையாளா்கள், பணியாளா்கள் தாக்கப்பட்டுள்ளனா்.
எனவே, உணவகம், தேநீா் விடுதிகளை சேதப்படுத்தும் நபா்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பதுடன், பணியாளா்களின் பாதுகாப்பையும் உறுதிசெய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.