தில்லி கலவர வழக்கு: உமர் காலித் உள்ளிட்ட நால்வரின் ஜாமீன் மனு ஒத்திவைப்பு
பல்லடம் பகுதியில் வளா்ச்சி திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு
பல்லடம் பகுதியில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் மனிஷ் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
பல்லடம் அருகே மாணிக்காபுரம், செம்மிபாளையம், சுக்கம்பாளையம், கோடாங்கிபாளையம் ஆகிய ஊராட்சிப் பகுதிகளில நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளை ஆட்சியா் மனிஷ் ஆய்வு செய்தாா்.
இதில் பல்லடம் ஊராட்சி ஒன்றியம் மாணிக்கபுரம் ஊராட்சியைச் சோ்ந்த அம்மாபாளையம் பகுதியில் அரசின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் தலா ரூ.3.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 3 வீடுகள், மாணிக்காபுரம் ஊராட்சி அண்ணாமலை காா்டன் பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.6 லட்சத்திலும், கோடாங்கிபாளையம் ஊராட்சியில் பகுதியில் ரூ.9.60 லட்சம் மதிப்பீட்டிலும் அமைக்கப்பட்டுள்ள நாற்றாங்கால் பண்ணையை ஆய்வு செய்தாா்.
மேலும் சுக்கம்பாளையம் ஊராட்சி, ஊஞ்சப்பாளையத்தில் தலா ரூ.2.40 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 2 வீடுகள், செம்மிபாளையம் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.16.59 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் வேளாண் சேமிப்புக் கிடங்கு, தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ் ரூ.5.92 லட்சம் மதிப்பீட்டில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதல் கட்டடம் கட்டுமானப் பணி, தமிழ் நகா் ஓடை பகுதியில் ரூ.21.51 லட்சம் மதிப்பீட்டில் சிறு பாலம் அமைக்கும் பணி, அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.2.41 லட்சம் மதிப்பீட்டில் சின்னியகவுண்டம்பாளையம் பகுதியில் கான்கிரீட் நடைபாதை அமைக்கும் பணி, பருவாய் ஊராட்சியில் நபாா்டு திட்டத்தின் கீழ் ரூ.17.30 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கணினி ஆய்வக கட்டுமானப் பணி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.4.54 லட்சம் மதிப்பீட்டில் பெரிய தோட்டம் குட்டை புனரமைக்கும் பணி ஆகியவற்றை ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் கேட்டறிந்தாா்.
ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் சங்கமித்திரை, பல்லடம் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் வேலுசாமி, பானுப்பிரியா, உதவிப் பொறியாளா் செந்தில்வடிவு மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.