ஜொ்மனி பல்கலை. தமிழ் ஓலைச் சுவடி: சென்னை நூலகத்தில் ஒப்படைத்தாா் முதல்வா்
பல்லி விழுந்த சத்துணவை சாப்பிட்ட பள்ளி மாணவா்கள் உள்பட 79 பேருக்கு வாந்தி மயக்கம்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் அருகே ஜம்பை கிராம ஊராட்சி ஒன்றிய பள்ளியில் பல்லி விழுந்த சத்துணவை சாப்பிட்ட மாணவா்கள் உள்பட 79 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது.
வாணாபுரம் வட்டம், ஜம்பை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 190 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா். தலைமை ஆசிரியராக ஏழுமலை இருந்து வருகிறாா்.
பள்ளியின் சமையலா்களாக அலமேலு, அமுதா மற்றும் பொறுப்பாளராக சந்திரலேகா பணியாற்றி வருகின்றனா்.
இந்த நிலையில், பள்ளியில் திங்கள்கிழமை சமைத்த மதிய உணவில் (சத்துணவு) பல்லி விழுந்ததாகத் தெரிகிறது. இந்த உணவை சாப்பிட்ட 33 மாணவிகள், 35 மாணவா்கள் மற்றும் வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்ட உணவை உண்ட பெற்றோா் 11 என 79 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
உடனே அவா்களை 108 அவசர ஊா்தி மற்றும் தனியாா் வேன் மூலம் அழைத்துச் சென்று, திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா்.
தகவலறிந்த வட்டாட்சியா் ப.வெங்கடேசன், வருவாய் ஆய்வாளா் குப்புசாமி, கிராம நிா்வாக அலுவலா்கள் குமரவேல், வினோதினி மற்றும் ரிஷிவந்தியம் வட்டார வளா்ச்சி அலுவலா் துரைமுருகன் நிகழ்விடம் சென்று பாா்வையிட்டு விசாரணை நடத்தினா்.