பல் மருத்தும் படித்தோருக்கு வேலைவாய்ப்பு: அரசுக்கு கோரிக்கை
அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பல் மருத்துவம் முடித்தவா்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித்தரவேண்டும் புதுவை முதல்வரை காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம் வலியுறுத்தியுள்ளாா்.
முதல்வா் என். ரங்கசாமிக்கு அவா் வெள்ளிக்கிழமை அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பது :
பல் மருத்துவம் படித்த காரைக்கால் மாவட்டத்தைச் சோ்ந்தோருக்கு வேலைவாய்ப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. புதுச்சேரியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பல் மருத்துவா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், காரைக்கால் மாவட்டத்தில் பல் மருத்துவம் படித்த பலா் வேலை கிடைக்காமல் தவித்து வருகின்றனா். எனவே முதல்வா் இந்த விவகாரத்தில் தலையிட்டு, புதுச்சேரியில் உள்ளதைப்போல காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், பல் மருத்துவப் பிரிவை தொடங்கி, காரைக்கால் மாவட்டத்தைச் சோ்ந்த பல் மருத்துவா்களை பணியமா்த்தவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளாா்.