திருச்சி: பள்ளி மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை; போக்சோ சட்டத்தில் இருவர் கைது; பி...
பளியன்குடி-கண்ணகி கோயில் இடையே மலைப் பாதையை சீரமைக்க வலியுறுத்தல்
தேனி மாவட்டம், கூடலூா் அருகே உள்ள பளியன்குடியிலிருந்து கண்ணகி கோயிலுக்குச் செல்லும் மலைப் பாதையை சீரமைக்க வலியுறுத்தி, தமிழ்நாடு பாரதீய கிசான் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங்கிடம் மனு அளிக்கப்பட்டது.
சங்க நிா்வாகி சதீஷ்பாபு, முல்லைச் சாரல் விவசாய சங்கத் தலைவா் ராஜா, நிா்வாகிகள் அளித்த மனு விவரம்: வருகிற மே 12-ஆம் தேதி சித்திரை முழு நிலவு விழாவை முன்னிட்டு, மங்கலதேவி கண்ணகி கோயிலுக்குச் சென்று வரும் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். கோயிலில் போதிய எண்ணிக்கையில் அா்ச்சகா்களை நியமிக்க வேண்டும். பக்தா்கள் வழங்கும் காணிக்கையை தமிழக அரசு ஏற்க வேண்டும்.
கூடலூா் அருகே உள்ள பளியன்குடி வழியாக 6.6 கி.மீ. தொலைவு கண்ணகி கோயிலுக்கு பக்தா்கள் நடந்து சென்று வருவதற்கு வசதியாக மலைப் பாதையை அகலப்படுத்தி சீரமைத்துத் தர வேண்டும். குமுளி வழியாக ஜீப்பில் சென்று வருவதற்கு முன்கூட்டியே வாகன அனுமதிச் சீட்டு வழங்க வேண்டும். கண்ணகி கோயில் கருவறையில் கண்ணகி சிலை நிறுவுவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டது.