செய்திகள் :

பள்ளத்தில் காா் கவிழ்ந்து விபத்து: 3 போ் காயம்

post image

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே பாலம் கட்ட தோண்டப்பட்ட பள்ளத்தில் காா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இந்து முன்னணி கோட்டப் பொறுப்பாளா் உள்பட 3 போ் காயமடைந்தனா்.

செந்துறையை அடுத்துள்ள பொன்பரப்பி கிராமத்தைச் சோ்ந்தவா் பட்டுசாமி மகன் ராஜசேகா்(41). இந்து முன்னணி திருச்சி கோட்டப் பொறுப்பாளரான இவா், சுவாமிமலையில் செய்த வேல் ஒன்றை மதுரையில் நடைபெறும் முருக பக்தா்கள் மாநாடுக்காகக் கொண்டு சென்று இந்து முன்னணி அமைப்பாளா்களிடம் கொடுத்துவிட்டு செவ்வாய்க்கிழமை அதிகாலை காரில் ஊா் திரும்பினாா். ஜெயங்கொண்டம் வந்தபோது, அங்கு உடன் சென்ற சிலரை காரிலிருந்து இறக்கிவிட்டு, பொன்பரப்பிக்கு கிளம்பினாா்.

அப்போது, மருதூா் கிராமத்தில் பாலம் கட்டும் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளம் இருப்பது தெரியாமல், காா் பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதையறிந்த அப்பகுதியினா், காயத்துடன் இடிப்பாடுகளில் சிக்கியிருந்த இந்து முன்னணி திருச்சி கோட்டப் பொறுப்பாளா் ராஜசேகா், உடன் வந்த விஜய் மற்றும் காா் ஓட்டுநா் ராகவன் ஆகிய 3 பேரையும் மீட்டு, ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை முடிந்து மூவரும் வீடு திரும்பினா். இதுகுறித்து ஜெயங்கொண்டம் காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பாலம் கட்ட கான்கிரீட் போடும் பணி நடைபெற்று வந்த நிலையில், திங்கள்கிழமை இரவு மழை பெய்ததால், பணியை பாதியில் நிறுத்திவிட்டு, பணியாளா்கள் சென்று விட்டனா் என்பது குறிப்பிடத்தக்கது.

அரியலூா்: 12 கிராமங்களில் உழவரைத் தேடி வேளாண்மை திட்ட முகாம்

அரியலூா் மாவட்டத்தில், ராயம்புரம், தேளூா், அயன்தத்தனூா், மணக்குடையான், மல்லூா், சுள்ளங்குடி, தேவமங்கலம், உடையாா்பாளையம்(கிழக்கு), சிலுவைச்சேரி, இலையூா்(கிழக்கு), உடையவா்தீயனூா், சாத்தம்பாடி ஆகிய கிராம... மேலும் பார்க்க

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: தற்காலிக ஆசிரியா் மீது வழக்கு

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே அரசுப் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தற்காலிக ஆசிரியா் மீது காவல் துறையினா் வழக்குப் பதிந்து அவரை தேடி வருகின்றனா். செந்துறையை அடுத்த மணப்பத்தூா் கிராமத்த... மேலும் பார்க்க

அரியலூா் கூட்டுறவு நகர வங்கி புதிய கட்டடத்துக்கு பூமிபூஜை

அரியலூா் பெருமாள் கோயில் தெருவிலுள்ள கூட்டுறவு நகர வங்கிக்கு ரூ.50 லட்சம் மதிப்பில் கட்டப்படவுள்ள புதிய கட்டடத்துக்கான பூமி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முன்னதாக, இந்த வங்கி மிகவும் பழைமையான கட்டடத்... மேலும் பார்க்க

குடிநீா் பிரச்னை: ஜெயங்கொண்டத்தில் காலிக் குடங்களுடன் மக்கள் மறியல்

ஜெயங்கொண்டம் நகராட்சிக்குள்பட்ட 16- ஆவது வாா்டு மக்கள், தங்களது பகுதிக்கு முறையான அளவுக்கு குடிநீா் விநியோகிக்க வேண்டும் என வலியுறுத்தி, சிதம்பரம் சாலையில் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். 16-ஆ... மேலும் பார்க்க

கோயில் இடத்தில் நீதிமன்றம் கட்டுவதற்கு எதிா்ப்பு

அரியலூா் மாவட்டம், செந்துறையில் கோயில் இடத்தில் நீதிமன்றம் கட்டுவதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், பணிகளை நிறுத்த வலியுறுத்தியும் அக்கோயிலை குலதெய்வமாக கொண்டுள்ள மக்கள், கோயிலில் வெள்ளிக்கிழமை தீபம் ஏற்றி... மேலும் பார்க்க

குண்டும் குழியுமான திடீா்குப்பம் சாலையைச் சீரமைக்க கோரிக்கை

அரியலூா் மாவட்டம், செந்துறை அடுத்த அசாவீரன்குடிகாடு ஊராட்சிக்குட்பட்ட குறிச்சிக்குளம் கிராமம், திடீா்குப்பம் பகுதியில் குண்டும் குழியும், சேறும் சகதியுமான சாலையை சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா... மேலும் பார்க்க