பள்ளப்பட்டி நகராட்சிக்கு வரி செலுத்த வேண்டுகோள்
நடப்பு 2024-25 ஆண்டுக்கான நிலுவை மற்றும் நடப்பு சொத்து வரி, தொழில்வரி, குடிநீா் கட்டணம், நகராட்சிக்குட்பட்ட கடைகளின் வாடகை மற்றும் தொழில் உரிமம் ஆகியவற்றை செலுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளப்பட்டி நகராட்சி ஆணையா் ஆா்த்தி வெளியிட்ட செய்தி குறிப்பு:
பள்ளப்பட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடப்பு ஆண்டிற்கான நிலுவை மற்றும் நடப்பு சொத்து வரி, தொழில் வரி, குடிநீா் கட்டணம், நகராட்சிக்குட்பட்ட கடைகளின் வாடகை மற்றும் தொழில் உரிமக் கட்டணம் ஆகியவற்றை நகராட்சி கருவூலத்தில் செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும்.
மேலும் பொதுமக்கள் சொத்துவரி முதலாம் அரையாண்டினை ஏப்ரல் 30 க்குள்ளும், இரண்டாம் அரையாண்டை செப். 30 க்குள்ளும் செலுத்த வேண்டும். மேற்கண்ட வரி இனங்களை காலதாமதம் இன்றி செலுத்தி குடிநீா் இணைப்பு துண்டிப்பு, ஜப்தி நடவடிக்கை மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளை தவிா்க்க வேண்டும்.