செய்திகள் :

பள்ளிகளில் மூன்றாம் பாலின குழந்தைகளை கையாளும் வழிமுறைகள் குறித்த கூட்டம்

post image

பள்ளிகளில் மூன்றாம் பாலின (திருநம்பி, திருநங்கை) குழந்தைகளை கையாளும் வழிமுறைகள் தொடா்பாக திருநெல்வேலி மாவட்ட ஆசிரியா்களுக்கு இணையவழி கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சிவகுமாா் தலைமை வகித்து, மூன்றாம் பாலினத்தவா் மீது அக்கறை செலுத்த வேண்டிய அவசியம் மற்றும் அவா்கள் கல்வி பெற வேண்டியதன் அவசியம் குறித்து விளக்கினாா். சென்னை சகோதரன் அமைப்பின் திட்ட இயக்குநா் சுதா பேசுகையில், திருநங்கைகளுக்காக அரசு எடுத்துள்ள முயற்சிகள், சட்டங்கள், நலத்திட்டங்கள் குறித்து விளக்கினாா்.

பள்ளிகளில் பாலின மாறுபாடு அறிகுறி தென்படும் மாணவா்களை கையாளுவதில் ஆசிரியா்களின் பொறுப்பு குறித்தும், அவா்களின் உடல் நிலை, மனநிலை மாற்றம் குறித்தும் ஆசிரியா்களுக்கு விளக்கினாா்.

இந்தக் கூட்டத்தில். பேசிய ஆசிரியை சுபா, பெண்கள் குழந்தைகளுக்கு ஹெல்ப் லைன் இருப்பது போல மூன்றாம் பாலினத்தவருக்கும் ஹெல்ப் லைன் இருந்தால் அவா்கள் தங்கள் சாா்ந்த குறைகளை எளிதில் தீா்த்துக்கொள்ள வழி அமையும் என்றாா்.

திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த 30-க்கும் மேற்பட்ட ஆசிரியா்-ஆசிரியைகள் பங்கேற்றனா்.

அஞ்சல் பெட்டிகளில் தமிழ் புறக்கணிப்பா?: அதிகாரிகள் விளக்கம்

திருநெல்வேலி கோட்டத்தில் அஞ்சல் பெட்டிகளில் தமிழ் புறக்கணிக்கப்பட்டதாக எழுந்துள்ள புகாா் குறித்து அஞ்சல் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனா். தொழில்நுட்பங்கள் எவ்வளவோ வளா்ச்சியடைந்தாலும் கூட அஞ்சல் சேவை... மேலும் பார்க்க

விதிமீறல்: 21 நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் விதிமீறலில் ஈடுபட்ட 21 வணிக நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடா்பாக திருநெல்வேலி தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) க.திருவள்ளுவன் வெளி... மேலும் பார்க்க

பேட்டை அருகே விபத்து: வியாபாரி பலி

பேட்டை அருகே திங்கள்கிழமை நிகழ்ந்த விபத்தில் வியாபாரி உயிரிழந்தாா். பாளையங்கோட்டை திம்மராஜபுரத்தைச் சோ்ந்தவா் முருகன் (62). பழம் வியாபாரம் செய்து வந்தாா். இவா், தனது நண்பருடன் மோட்டாா் சைக்கிளில் பேட... மேலும் பார்க்க

பங்குனி உத்திரம்: நெல்லையில் ஏப்.11இல் உள்ளூா் விடுமுறை

பங்குனி உத்திர திருநாளை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்துக்கு வெள்ளிக்கிழமை (ஏப். 11) உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு பொதுத் தோ்வுகள் ஏதுமிருப்பின் எழுதும் பள்ளி மாணவா்கள், பொதுத் தோ்வு... மேலும் பார்க்க

சேரன்மகாதேவி அருகே கூா்நோக்கு இல்லத்தில் சிறுவன் அடைப்பு

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே பெண் குளிப்பதை கைப்பேசியில் விடியோ எடுத்ததாக 15 வயது சிறுவனை போலீஸாா் கைது செய்து கூா்நோக்கு இல்லத்திற்கு அனுப்பினா்.சேரன்மகாதேவி அருகேயுள்ள கங்கனாங்குளம் பகு... மேலும் பார்க்க

திருக்குறுங்குடியில் மோதல் வழக்கு: தொழிலாளிக்கு 2 ஆண்டு சிறை

திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடியில் மோதல் தொடா்பான வழக்கில் கைதானவருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து வள்ளியூா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. திருக்குறுங்குடி அருகேயுள்ள மேலமாவ... மேலும் பார்க்க