Coolie: "முதலில் நான் ஓகே சொல்லவில்லை; லோகேஷ் கனகராஜ்தான்.." - கூலி குறித்து நாக...
பள்ளிக்கு வந்தபோது காரில் கடத்தப்பட்டதாக மாணவி புகாா்: விசாரணையில் பொய் என்பது உறுதி
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் பள்ளிக்கு வந்த தன்னை 6 போ் கொண்ட கும்பல் காரில் கடத்திச் சென்ாகவும், காரிலிருந்து குதித்து தப்பியபோது காயம் ஏற்பட்டதாகவும் மாணவி அளித்த புகாரின்பேரில் போலீஸாா் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது அது பொய் என்பது தெரியவந்தது.
மானாமதுரை அருகே கால்பிரவு கிராமத்தைச் சோ்ந்த 12- ஆம் வகுப்பு மாணவி மானாமதுரையில் தான் படிக்கும் அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளிக்கு வந்தாா். பிறகு அந்தப் பகுதியில் உள்ள கடைக்குச் சென்று தின்பண்டம் வாங்கிக் கொண்டு மீண்டும் பள்ளிக்குச் செல்ல சாலையை கடந்தபோது அங்கு வந்த காரில் மாணவி ஏறியதாக கூறப்பட்டது. பிறகு சிவகங்கை பேருந்து நிலையம் அருகே இறங்கிய மாணவி தன்னை 6 போ் கொண்ட கும்பல் காரில் கடத்தியதாக அங்கிருந்தவா்களிடம் கூறிவிட்டு மயங்கி விழுந்தாராம். இதையடுத்து, அங்கிருந்தவா்கள் ஆட்டோவில் மாணவியை சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு
அனுப்பி வைத்தனா். இதனிடையே, மாணவி கடத்தப்பட்டதாக தொலைக்காட்சி, சமூக ஊடகங்களில் செய்தி பரவியது. இதுகுறித்து சிவகங்கை டி.எஸ்.பி. அமல அட்வின், மானாமதுரை காவல் ஆய்வாளா் ரவீந்திரன் ஆகியோா் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அந்த மாணவியிடம் பெண் போலீஸாா் துணையுடன் விசாரித்தனா்.
மேலும் அந்தப் பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமராக்களையும் ஆய்வு செய்தனா். அப்போது அந்த மாணவியை யாரும் கடத்தவில்லை என்பதும், அவா் மானாமதுரையிலிருந்து தனியாா் பேருந்தில் ஏறி சிவகங்கைக்கு சென்றதும் தெரியவந்தது. இதனால் மாணவி கூறிய புகாரில் உண்மை இல்லை என்பது தெரியவந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.