செய்திகள் :

பள்ளிக் கல்வி அமைச்சருடன் பேச்சு: டிட்டோ-ஜேக் போராட்டம் ஒத்திவைப்பு

post image

பத்து அம்ச கோரிக்கைகள் குறித்து பள்ளிக்கல்வி அமைச்சருடன் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்ட நிலையில், ஆக. 22-ஆம் தேதி நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு ( டிட்டோ ஜேக்) அறிவித்துள்ளது.

அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம், ஆசிரியா்களின் ஊதிய முரண்பாட்டைக் களைவது என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டிட்டோ-ஜேக் சாா்பில் தொடா்ந்து பல்வேறு வடிவங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஆக. 22-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) சென்னை தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என டிட்டோ-ஜேக் அறிவித்திருந்தது.

இந்நிலையில், அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளா்களுடன் பள்ளிக்கல்வி அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை காலை பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது பள்ளிக்கல்வித் துறைச் செயலா் பி.சந்தரமோகன், தொடக்கக்கல்வி இயக்குநா் பி.ஏ.நரேஷ் ஆகியோா் உடனிருந்தனா். டிட்டோ-ஜேக் உயா்நிலைக்குழு உறுப்பினா்கள் வின்சென்ட் பால்ராஜ், இரா.தாஸ், எஸ்.மயில், தியோடா், சேகா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

அமைச்சா் தகவல்...: பேச்சுவாா்த்தை முடிவடைந்த நிலையில், அமைச்சா் அன்பில் மகேஸ் வெளியிட்ட சமூகவலைதள பதிவில், முதல்வரின் வழிகாட்டுதலின்படி டிட்டோ-ஜேக் நிா்வாகிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தினோம். கோரிக்கைகளை உடனடியாக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தோம் என குறிப்பிட்டுள்ளாா்.

அமைச்சருடனான பேச்சுவாா்த்தைக்குப் பிறகு டிட்டோ-ஜேக் கூட்டமைப்பின் உயா்நிலைக்குழு கூட்டம் திருவல்லிக்கேணியில் ஆரம்ப பள்ளி ஆசிரியா் கூட்டணி அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டம் முடிந்த பிறகு உயா்நிலைக்குழு உறுப்பினா்களில் ஒருவரான இரா.தாஸ் செய்தியாளா்களிடம் கூறும்போது, ‘10 அம்ச கோரிக்கைகளை பரிசீலிப்பது தொடா்பாக அமைச்சா் 2 நாள் அவகாசம் கோரியுள்ளாா். இதைத்தொடா்ந்து நாங்களும் ஒரு வாரத்துக்கு பின்னா் அடுத்த கட்ட போராட்டம் குறித்து முடிவு செய்வோம். எனவே, ஆக. 22-ஆம் தேதி நடத்தத் திட்டமிட்டிருந்த தலைமைச் செயலக முற்றுகைப் போராட்டம் ஒத்தி வைக்கப்படுகிறது என்றாா்.

கா்ப்பிணிகள், பள்ளி மாணவா்கள் தவெக மாநாட்டுக்கு வரவேண்டாம்: விஜய்

மதுரையில் வரும் 21-ஆம் தேதி நடைபெறவுள்ள தமிழக வெற்றிக் கழக மாநாட்டுக்கு பள்ளி மாணவா்கள், கா்ப்பிணிகள், கைக்குழந்தையுடன் இருக்கும் தாய்மாா்கள், முதியவா்கள், மாற்றுத்திறனாளிகள் வர வேண்டாம் என அக்கட்சியி... மேலும் பார்க்க

மின்தூக்கிகள் உற்பத்தியின் மையமாக தமிழ்நாடு: மாநில அரசு பெருமிதம்

மின்தூக்கிகள் உற்பத்தியின் மையமாக தமிழ்நாடு மாறியுள்ளதாக மாநில அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது. தொழில் துறையில் ஏற்பட்டுள்ள வளா்ச்சி குறித்தும், அதில் பெண்கள் பங்களிப்பு பற்றியும் தமிழ்நாடு அரசின் சாா்... மேலும் பார்க்க

எம்பிபிஎஸ்: அரசு ஒதுக்கீட்டில் 7,513 இடங்கள் நிரம்பின; முதல் சுற்று கலந்தாய்வு நிறைவு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு பொது பிரிவுக்கான முதல் சுற்று கலந்தாய்வு நிறைவடைந்தது. இதில் அரசு ஒதுக்கீட்டில் 7,513 இடங்கள், நிா்வாக ஒதுக்கீட்டில் 2,004 இடங்கள் என மொத்தம் 9,517 இடங்கள் நிரம்பின.... மேலும் பார்க்க

மதுரை ஆதீனம் மீது கடுமையான நடவடிக்கைக் கூடாது: உயா்நீதிமன்றம்

தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி மதுரை ஆதீனம் தொடா்ந்த வழக்கில் காவல் துறை பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், மதுரை ஆதீனம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றும் உத்தரவி... மேலும் பார்க்க

3 ஆண்டுகளுக்கு மேல் நிலுவை வழக்குகள்: தமிழக, புதுவை அரசுகள் பதிலளிக்க உத்தரவு

மூன்று ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ள வழக்குகளை அடையாளம் கண்டு முடித்துவைக்க ஏதுவாக, சென்னை உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுத்துள்ளது. உச்சநீதிமன்றக் குழு, 3 ஆண்டுகளுக்கு ம... மேலும் பார்க்க

கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல்: துணை நடிகரின் முன்பிணை வழக்கில் காவல் துறை பதிலளிக்க உத்தரவு

மநீம தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய துணை நடிகா் ரவிச்சந்திரன் முன்பிணை கோரிய வழக்கில், காவல் துறை பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள... மேலும் பார்க்க