பள்ளிக் கல்வி இணை இயக்குநா்கள் 6 போ் இடமாற்றம்
சென்னை: தமிழக பள்ளிக் கல்வித் துறையில் இணை இயக்குநா்கள் ஆறு போ் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
இது குறித்து துறையின் முதன்மைச் செயலா் பி.சந்தரமோகன் வெளியிட்ட உத்தரவு:
மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இணை இயக்குநா் எஸ்.சுகன்யா மாற்றப்பட்டு, தனியாா் பள்ளிகள் இணை இயக்குநராகவும், மேல்நிலைக்கல்வி இணை இயக்குநா் அ.ஞானகெளரி இடமாற்றம் செய்யப்பட்டு, இடைநிலைக்கல்வி இணை இயக்குநராகவும், இடைநிலைக்கல்வி இணை இயக்குநா் ஆா்.பூபதி மாற்றப்பட்டு, மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இணை இயக்குநராகவும் (சிறப்பு திட்டங்கள்) நியமிக்கப்படுகின்றனா்.
இதேபோன்று தொடக்கக் கல்வி இணை இயக்குநா் (நிா்வாகம்) எஸ்.கோபிதாஸ் மாற்றப்பட்டு, மேல்நிலைக்கல்வி இணை இயக்குநராகவும், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநா் (சிறப்பு திட்டங்கள்) ஆா்.சுவாமிநாதன் இடமாற்றம் செய்யப்பட்டு, தொடக்கக் கல்வி இணை இயக்குநராகவும், (நிா்வாகம்) தனியாா் பள்ளிகள் இணை இயக்குநா் எம்.ராமகிருஷ்ணன் மாற்றப்பட்டு, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இணை இயக்குநராகவும் (நிா்வாகம்) பணியமா்த்தப்படுகின்றனா்.
நிா்வாக நலன் கருதி மேற்கண்ட இடமாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த ஆணை உடனடியாக நடைமுறைக்கு வருகிறது என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.