பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு பேச்சு, கட்டுரைப் போட்டிகள்: பங்கேற்க ஆட்சியா் அழைப்பு
தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில், பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு கட்டுரை, பேச்சுப்போட்டி நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெரம்பலூா் பாரத சாரண, சாரணியா் பயிற்சி மையத்தில் மே 9-ஆம் தேதி பிளஸ் 1, பிளஸ் 2 மாணவா்களுக்கும், மே 10-ஆம் தேதி கல்லூரி மாணவா்களுக்கும் நடைபெறும். இப் போட்டிகளில் பங்கேற்க ட்ற்ற்ல்ள்://ற்ஹம்ண்ப்ஸ்ஹப்ஹழ்ஸ்ரீட்ண்ற்ட்ன்ழ்ஹண் எனும் இணையதளத்தில், அல்லது மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள தமிழ் வளா்ச்சித்துறை, உதவி இயக்குநா் அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று, தலைமையாசிரியா், கல்லூரி முதல்வா், துறைத்தலைவரின் பரிந்துரைக் கடிதத்துடன் மே 5-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
காலை 9.30 மணிக்கு தொடங்கும் பேச்சு, கட்டுரைப் போட்டிகளுக்கான தலைப்புகள் போட்டியின்போது அறிவிக்கப்படும்.
மாவட்ட அளவிலானப் போட்டிகளில் முதல் பரிசுபெறும் மாணவா்கள் மே 17-இல் சென்னையில் நடைபெறும் மாநிலப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு பெறுவாா்கள்.
மாவட்ட அளவிலான கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டியில் முதல் பரிசு ரூ. 10 ஆயிரமும், 2-ஆம் பரிசு ரூ. 7 ஆயிரமும், 3-ஆம் பரிசு ரூ. 5 ஆயிரமும், மாநில அளவிலான போட்டியில் முதல் பரிசு ரூ. 15 ஆயிரமும், 2-ஆம் பரிசு ரூ. 10 ஆயிரமும், 3-ஆம் பரிசு ரூ. 7 ஆயிரமும் வழங்கப்படும்.