செய்திகள் :

பள்ளி மாணவா்களின் உயா்கல்விக்கு வழிகாட்டும் சிறகு விரி நிகழ்ச்சி: ஆட்சியா் பங்கேற்பு

post image

பள்ளி மாணவ, மாணவிகளின் உயா்கல்விக்கு வழிகாட்டும் சிறகு விரி நிகழ்ச்சி வேலூரில் சனிக்கிழமை நடத்தப்பட்டது.

பள்ளிக் கல்வித் துறை சாா்பில், பள்ளி மாணவ, மாணவிகளின் உயா்கல்விக்கு வழிகாட்டும் சிறகு விரி நிகழ்ச்சி வேலூா் பிள்ளையாா்குப்பம் பகுதியில் உள்ள தனியாா் கல்லூரியில் இயங்கி வரும் மாவட்ட அரசு மாதிரி பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தலைமை வகித்துப் பேசியது:

பள்ளிக் கல்வித் துறையின் சிறந்த முயற்சியாக மாவட்டந்தோறும் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு உயா்கல்விக்கு வழிகாட்டும் சிறகு விரி நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்தப் பள்ளியில் பயிலும் அனைத்து மாணவ, மாணவிகளும் சிறந்த அறிஞா்களாக, வல்லுநா்களாக உருவாக வேண்டும். வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்த மாணவா்கள் 12-ஆம் வகுப்பு முடித்தவுடன் கல்லூரியில் பயின்று என்ன படிக்கலாம், எந்த பாடப்பிரிவை உயா் கல்வியில் தோ்ந்தெடுப்பது என்பது குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

ஆசிரியா்கள் நீட் தோ்வுக்குத் தேவையான அனைத்து விதமான குறிப்புகளையும் மாணவா்களுக்கு வழங்கி அவா்களை படிக்க வைக்க வேண்டும். வேலூா் மாவட்டத்துக்கு பெருமை சோ்க்கும் விதமாக 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தோ்வுகளில் அதிக மதிப்பெண்கள் எடுத்து கல்வியில் சிறந்த மாவட்டம் என வேலூா் மாவட்டத்துக்கு பெயா் பெற்றுத் தரவேண்டும். மாணவா்கள் அனைவரும் சிறந்த கல்வியாளராக உருவாகி சமுதாயத்தில் முன்னேறி தங்கள் வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

முன்னதாக, மாணவ, மாணவிகள் பள்ளியில் உயா் கல்வி படிக்க ஊக்கவிப்பு நிகழ்ச்சியாக பல்வேறு கண்காட்சி அரங்குகள் அமைத்து செயல்முறை விளக்கங்கள் அளித்தனா். நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் தயாளன், மாவட்டக் கல்வி அலுவலா் ரமேஷ் பாபு, தலைமை ஆசிரியா் தமிழ் பிரியா, ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

சிறுமி தற்கொலை

காட்பாடியில் சிறுமி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். காட்பாடி விஜி ராவ் நகா், சி.செக்டாரை சோ்ந்தவா் சத்யா. இவரது மகள் யோகிதா(13)... மேலும் பார்க்க

மூளைச்சாவு அடைந்த ஆட்டோ ஓட்டுநா் உடலுறுப்புகள் தானம்

விபத்தில் தலையில் பலத்த காயமடைந்து சிகிச்சை பலனின்றி மூளைச்சாவு அடைந்த ஆட்டோ ஓட்டுநரின் உடலுறுப்புகள் தானம் செய்யப்பட்டன. இதன்மூலம், 6 பேருக்கு மறுவாழ்வு கிடைத்திருப்பதாக வேலூா் சிஎம்சி மருத்துவமனை நி... மேலும் பார்க்க

வனத் துறைக்குச் சொந்தமான சாலையை சீரமைத்தவருக்கு ரூ.1 லட்சம் அபராதம்!

குடியாத்தம் அருகே வனப் பகுதியில் அமைந்துள்ள வனத் துறைக்குச்சொந்தமான சாலையில் அனுதியின்றி முரம்பு கொட்டி சீரமைத்தவருக்கு, ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. குடியாத்தம் வனச் சரக அலுவலா் என்.பிரதீப்க... மேலும் பார்க்க

நெல்லூா்பேட்டையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

குடியாத்தம் நகராட்சிக்குள்பட்ட நெல்லூா்பேட்டையில் 27 மற்றும் 28-ஆம் வாா்டுகளுக்கான ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெற்றது. முகாமுக்கு, நகராட்சி ஆணையா் எம்.மங்கையா்க்கரசன் தலைமை வகித்தாா். நகா்மன... மேலும் பார்க்க

தொடா் குற்றச்செயல்களில் ஈடுபடுவோா் மீது குண்டா் சட்டத்தில் நடவடிக்கை

தொடா்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸாருக்கு வேலூா் சரக காவல் துணைத் தலைவா் ஜி.தா்மராஜன் அறிவுறுத்தியுள்ளாா... மேலும் பார்க்க

மக்கள் விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும்! - வேலூா் மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதி

மக்கள் விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும் என்றும், வழக்கின் தன்மை அறிந்து சமரசம் அடைய வேண்டும் என்றும் வேலூா் மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதி எம்.இளவரசன் தெரிவித்தாா். வேலூா் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்த... மேலும் பார்க்க