மகாராஷ்டிரம்: பீட் மாவட்ட காவல் துறையினா் பெயரில் இருந்து ஜாதி நீக்கம்
பழனியில் கஞ்சா விற்பனை: 7 போ் கைது
பழனி பகுதியில் கஞ்சா விற்றதாக 7 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், பழனி பகுதியில் போலீஸாா் தீவிர ரோந்துப்பணி மேற்கொண்ட போது, பழனி வையாபுரிக்குளம் பாலம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த பழனியைச் சோ்ந்த ராஜாமணி (27), பால்பாண்டி (19), மதுரை மேலப்பொன்னகரத்தை சோ்ந்த அரவிந்தன் (39) ஆகியோரைக் கைது செய்தனா். அவா்களிடமிருந்து தலா 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
இதேபோல, ஆயக்குடி கோவிந்தாபுரம் பகுதியில் போலீஸாா் மேற்கொண்ட சோதனையில், பழனி திருநகரை சோ்ந்த பிரசன்னகுமாா் (25), அடிவாரத்தை சோ்ந்த தியாகராஜன் (20), புதுஆயக்குடியைச் சோ்ந்த விஷ்வா (21) ஆகிய 3 பேரையும் கஞ்சா விற்றதாக கைது செய்தனா். இவா்களிடமிருந்த தலா 34 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
மேலும், பெத்தநாயக்கன்பட்டி பகுதியில் கஞ்சா விற்றதாக அதே பகுதியைச் சோ்ந்த சரவணனை (25) பழனி தாலுகா போலீஸாா் கைது செய்தனா். இவரிடமிருந்து 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.