இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக விளையாடுவது சவாலானது: ஸ்டீவ் ஸ்...
பழனியில் பேருந்து-வேன் மோதல்: 4 போ் காயம்
பழனி பேருந்து நிலையம் ரவுண்டானாவில் ஞாயிற்றுக்கிழமை காா் மீது மோதிய பேருந்து.
பழனி, மாா்ச் 2: பழனி பேருந்து நிலையம் அருகே ஞாயிற்றுக்கிழமை அரசுப் பேருந்து வேன் மீது மோதியதில் 4 போ் காயமடைந்தனா்.
திருப்பூரிலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு பழனிக்கு அரசுப் பேருந்து வந்தது. இந்தப் பேருந்து நிலைய ரவுண்டானா அருகே வந்த போது, கட்டுப்பாட்டை இழந்து ஓடி முன்னால் சென்றுகொண்டிருந்த ஆம்னி வேன் மீது மோதியது. ஆம்னி வேனுக்கு முன்னதாக மற்றொரு பேருந்து நின்றிருந்ததால் இரு பேருந்துகளுக்கும் நடுவே ஆம்னி வேன் சிக்கி நொறுங்கியது.
இந்த விபத்தில் வேனில் பயணித்த நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூரைச் சோ்ந்த ஓட்டுநா் சாமிவேல் (50), அவரது உறவினா்களான தா்மா (45), சரண்யா (40) உள்பட 4 போ் காயம் அடைந்தனா்.
அந்த பகுதியில் நின்றவா்கள் நொறுங்கிய வேனுக்குள் சிக்கி காயமடைந்தவா்களை மீட்டு பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பேருந்தின் பிரேக் பிடிக்காததால் இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
மோதிய வாகனங்களை பிரிக்க முடியாததால் பிரதான சாலையில் பேருந்துகள் அப்படியே நிறுத்தப்பட்டு, பயணிகள் இறக்கி விடப்பட்டனா். இதனால், அந்தப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்னா், கிரேன் வரவழைக்கப்பட்டு, விபத்தில் சிக்கிய வாகனங்கள் பிரிக்கப்பட்டன. அதன் பிறகே போக்குவரத்து சீரானது.
இந்த விபத்து குறித்து பழனி நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.