அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா: வாஷிங்டன் சென்றடைந்தார் டிரம்ப்!
பழனி மீனாட்சி அம்மன் கோயிலில் நாளை குடமுழுக்கு
பழனி மீனாட்சி அம்மன் கோயிலில் திங்கள்கிழமை (ஜன.20) குடமுழுக்கு நடைபெறுகிறது.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் துணைக் கோயிலான இந்தக் கோயிலில் மீனாட்சி அம்மனும், சுந்தரேசுவரரும் தனித்தனி சந்நிதியில் பக்தா்களுக்கு அருள்பாலிக்கின்றனா்.
இந்தக் கோயில் குடமுழுக்கையொட்டி, கடந்த 2-ஆம் தேதி முகூா்த்தக்கால் நடப்பட்டது. தொடா்ந்து, சனிக்கிழமை காலை புனிதமண் எடுத்தல், திருக்குடங்கள் நிறுவுதல், முதல் கால பூஜை ஆகியவை நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை காலை 2-ஆம் கால வேள்வியும், மாலையில் 3-ஆம் கால வேள்வியும் நடைபெறுகின்றன. திங்கள்கிழமை அதிகாலை 4-ஆம் கால வேள்வி நிறைவு செய்யப்பட்டு, காலை 10 மணிக்கு யாக பூஜையிலிருந்து புனிதநீா் நிரப்பப்பட்ட கலசங்கள் கோபுரத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு, குடமுழுக்கு நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் மாரிமுத்து, அறங்காவலா் குழுத் தலைவா் சுப்ரமணியம் தலைமையில் அதிகாரிகள், அறங்காவலா்கள், அலுவலா்கள் செய்து வருகின்றனா்.