செய்திகள் :

பழம்பெரும் நடிகை புஷ்பலதா காலமானார்

post image
பழம்பெரும் நடிகை புஷ்பலதா காலமானார்.

சென்னையில் வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட பிரச்னைகளால் சிகிச்சைப் பெற்று வந்த இவர் சிகிச்சை பலனின்றி இன்று மாலை உயிரிழந்திருக்கிறார். இவருக்கு வயது 87.

எம்.ஜி. ஆர், சிவாஜி போன்ற தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களுடன் பணியாற்றியவர் புஷ்பலதா. தமிழில் 1961-ம் ஆண்டு வெளியான 'செங்கோட்டை சிங்கம்' என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் தமிழ் சினிமாவில் கதாநாயகியாகவும், துணை கதாபாத்திரங்களிலும் 100 திரைப்படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். தமிழ் மட்டுமல்ல தெலுங்கு, மலையாளம், இந்தி எனப் பிற மொழி திரைப்படங்களிலும் நடித்து கவனம் ஈர்த்தவர் புஷ்பலதா. இவர் நடிகர் ஏ.வி.எம் ராஜனின் மனைவி என்பது குறிப்பிடதக்கது.

Pushpalatha

`சாரதா', 'பார் மகளே பார்' போன்ற படைப்புகள் இவர் நடிப்பில் வெளியாகி ஹிட்டடித்தன. இவர் கடைசியாக முரளி நடிப்பில் 1999-ம் ஆண்டு வெளியான 'பூ வாசம்' என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு நடிப்பின் பக்கம் இவர் வரவில்லை. புஷ்பலதாவின் மறைவுக்கு தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Kamal Haasan: "தங்க மகள்களுக்குக் காதல்... கவிதை..." - சினேகனின் குழந்தைகளுக்குப் பெயர் சூட்டிய கமல்

சினேகன் - கன்னிகா தாம்பதிக்கு 2021-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. கடந்த மாதம் 25-ம் தேதி இந்த தம்பதிக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்திருந்தன. இச்செய்தியைத் தங்களின் சமூக வலைத்தளப் பக்கத்தின் மூலமாக அற... மேலும் பார்க்க

பேபி அண்ட் பேபி விமர்சனம்: குழந்தை மாறிப் போனதுக்கு இவ்ளோ அக்கப்போரா? காமெடியாவது பாஸாகிறதா?

சென்னை விமான நிலையத்திலிருந்து கோவைக்குச் செல்வதற்காகக் கிளம்பும் சிவாவும் (ஜெய்), மதுரைக்குச் செல்வதற்காகத் தயாராகும் குணாவும் (யோகி பாபு) தங்களது மனைவி குழந்தையுடன் காத்திருக்கிறார்கள். இந்நிலையில் ... மேலும் பார்க்க

2K Love Story Review: பார்த்துப் பழகிய கதை; பெயரளவில் மட்டுமே இருக்கும் `2கே வைப்ஸ்'!

2கே இளைஞர்களான கார்த்திக்கும் (ஜெகவீர்), மோனியும் (மீனாட்சி கோவிந்தராஜன்) இணைந்து 'ப்ரி வெட்டிங் ஃபோட்டோஷூட்' நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்கள். பள்ளிக் காலத்திலிருந்தே இணை பிரியாத நண்பர்களான இருவரும... மேலும் பார்க்க