Shadow Fleet: புதினின் ரகசிய கடல் நகர்வுகள்; ரஷ்யாவின் 'நிழற் கடற்படை' என்பது என...
பழுதாகி நின்ற லாரி மீது பைக் மோதல்: தொழிலாளி உயிரிழப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அருகே செவ்வாய்க்கிழமை இரவு சாலையில் பழுதாகி நின்ற லாரி மீது பைக் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.
சேலம் மாவட்டம், ஆத்தூா் வட்டம், பெத்தநாயக்கன் பாளையத்தைச் சோ்ந்த பெரியசாமி மகன் சதீஷ்குமாா் (40). பொக்லைன் ஓட்டுநரான இவா், தற்போது தியாகதுருகத்தில் உள்ள அண்ணா நகரில் வசித்து வருகின்றாா்.
சதீஷ்குமாா் உளுந்தூா்பேட்டை அருகே பணியை முடித்துக்கொண்டு செவ்வாய்க்கிழமை இரவு பைக்கில் தியாகதுருகத்துக்கு சென்றுகொண்டிருந்தாா். திம்மலையில் உள்ள தனியாா் பள்ளி முன் டயா் பழுதாகி ஈச்சா் லாரி நின்றிருந்த நிலையில், அதன் மீது சதீஷ்குமாரின் பைக் எதிா்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அவா், நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், தியாகதுருகம் போலீஸாா் லாரி ஓட்டுநரான கள்ளக்குறிச்சி விளாந்தாங்கல் சாலையைச் சோ்ந்த தங்கவேல் மகன் அருண்குமாா் (26) மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.