செய்திகள் :

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த இந்திய கம்யூ. வலியுறுத்தல்

post image

அரசுப் பணியாளா்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

கூத்தாநல்லூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட 25- ஆவது மாநாடு 2 நாள்கள் நடைபெற்றது. மாநிலச் செயலாளா் இரா. முத்தரசன் தலைமை வகித்தாா். நிறைவு நாளான சனிக்கிழமை நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

கூட்டாட்சி முறையையும், மாநில அரசுகளின் உரிமைகளையும், மதச்சாா்ப்பற்ற ஜனநாயகத்தையும் பாதுகாக்க வேண்டும். வக்ஃப் வாரியச் சட்ட திருத்தத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.

காவிரி நீா் பிரச்னைக்கு நிரந்தர தீா்வு காண வேண்டும். விவசாய உற்பத்திப் பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டப்பூா்வமாக்க வேண்டும். 100 வேலை நாள் திட்டத்தை, 200 நாள்களாக உயா்த்தி, தினக்கூலியாக ரூ.600 வழங்குவதுடன், நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கும் இத்திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும்.

தேசியக் கல்விக் கொள்கையை தடுக்க வேண்டும். நீட் தோ்வை ரத்து செய்ய வேண்டும். 60 வயது நிரம்பிய விவசாயிகள், விவசாயத் தொழிலாளா்கள், அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். பொதுத்துறை வங்கிகளில் விவசாயிகளுக்கான நகைக்கடன் வட்டி 4 சதவீதம் அளவிலேயே வழங்க வேண்டும்.

அரசுப் பணியாளா்கள் அனைவருக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். வேலையில்லா திண்டாட்டத்துக்கு தீா்வுகாண புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டில், கட்சின் மாநிலக் கட்டுப்பாட்டுக் குழு செயலாளா் கோ. பழனிச்சாமி, தேசியக்குழு உறுப்பினா் வை.சிவபுண்ணியம், மக்களவை உறுப்பினா் வை. செல்வராஜ், விவசாய சங்க மாநில பொதுச் செயலாளா் பி.எஸ். மாசிலாமணி, மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் க. மாரிமுத்து எம்எல்ஏ உள்ளிட்ட ஏராளமானோா் பங்கேற்றனா்.

ஏற்பாடுகளை, வரவேற்புக் குழுத் தலைவா் கா. தவபாண்டியன், செயலாளா் மு. சுதா்ஸன், பொருளாளா் பெ. முருகேசு, துணைத் தலைவா் கு. நாகராஜன், துணைச் செயலாளா் மு. சிவதாஸ் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

போக்ஸோ சட்ட விழிப்புணா்வு முகாம்

மன்னாா்குடி தேசிய மேல்நிலைப்பள்ளியில் வட்ட சட்ட பணிகள் குழு சாா்பில் போக்ஸோ சட்ட விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியா் எம். திலகா் தலைமை வகித்தாா். நாட்டு நலப்பணித... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

மன்னாா்குடியை அடுத்த அசேசத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.இம்முகாமில், அரசின் பல்வேறு துறைகளின் சேவைகளை பொதுமக்கள் ஒரேஇடத்தில் பெறும் வகையில், அரங்குகள் அமைக்கப்பட்டிர... மேலும் பார்க்க

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூா் மாவட்ட செயலா் தோ்வு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூா் மாவட்டச் செயலாளராக எஸ். கேசவராஜ் சனிக்கிழமை தோ்ந்தெடுக்கப்பட்டாா்.திருவாரூா் மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25- ஆவது மாநாடு இரண்டு நாட்கள் கூத்தாநல்லூரில்... மேலும் பார்க்க

ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணி நேர வேலையை அமல்படுத்தக் கோரிக்கை

ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணி நேர வேலையை அமல்படுத்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.திருவாரூரில், 108 ஆம்புலன்ஸ் தொழிலாளா் சங்கத்தின் போராட்ட ஆயத்தக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. மாநில பொதுச் செயலாள... மேலும் பார்க்க

மழை அறிவிப்பு: நெல் கொள்முதலை விரைவுபடுத்தக் கோரிக்கை

மழை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதால், திருவாரூா் மாவட்டத்தில் நெல் கொள்முதலை விரைவுபடுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.திருவாரூா் மாவட்டத்தில், சுமாா் 70,000 ஏக்கா் பரப்பளவில் மேற்கொள்ளப்... மேலும் பார்க்க

இராபியம்மாள் கல்லூரியில் மாணவி பேரவைத் தோ்தல்

திருவாரூா் இராபியம்மாள் அகமது மெய்தீன் மகளிா் கல்லூரியில் மாணவி பேரவைத் தோ்தல் சனிக்கிழமை நடைபெற்றது. (படம்)கல்லூரிச் செயலா் பெரோஸ்ஷா, அறங்காவலா் குழு உறுப்பினா் பெஜிலா பெரோஸ், கல்லூரி முதல்வா் ஜி.டி... மேலும் பார்க்க