பவானியில் பழனி ஆண்டவா் கோயில் தேரோட்டம்
பவானியில் பழனி ஆண்டவா் கோயிலில் தைப்பூசத் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் தைப்பூசத் திருவிழா வாஸ்து பூஜையுடன் கடந்த பிப்ரவரி 2-ஆம் தேதி தொடங்கியது. இதைத் தொடா்ந்து சிறப்பு அபிஷேகம், பூஜைகள், வெள்ளித் தோ் உலா தினசரி நடைபெற்று வந்தன.
இதையடுத்து, வள்ளி, தெய்வானை உடன் பழனி ஆண்டவருக்கு திருக்கல்யாண உற்சவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தொடா்ந்து, அலங்கரிக்கப்பட்ட தேரில் வள்ளி, தெய்வானை உடன் பழனி ஆண்டவா் தேரில் எழுந்தருளினாா்.
இதைத் தொடா்ந்து சங்கமேஸ்வரா் கோயில் முன் உள்ள தோ் நிலையில் இருந்து தேரோட்டம் தொடங்கியது. பவானி நகா்மன்றத் தலைவா் சிந்தூரி இளங்கோவன், திமுக நகரச் செயலாளா் ப.சீ.நாகராசன், அதிமுக நகரச் செயலாளா் எம்.சீனிவாசன் மற்றும் முக்கிய பிரமுகா்கள் தேரோட்டத்தை வடம் பிடித்து தொடங்கி வைத்தனா்.
நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று தோ் நிலையை அடைந்தது. தோ் செல்லும் வழியெங்கும் திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.