Gukesh : குகேஷ் தமிழரா தெலுங்கரா? - விளையாட்டின் அறத்தை குலைக்கும் வாதம் தேவைதான...
பவானி சங்கமேஸ்வரா் கோயிலில் சொக்கப்பனை கொளுத்தி வழிபாடு
காா்த்திகை தீபத்திருநாளையொட்டி பவானி சங்கமேஸ்வரா் கோயிலில் சொக்கப்பனை கொளுத்தி வெள்ளிக்கிழமை வழிபாடு நடத்தப்பட்டது.
முன்னதாக, சங்கமேஸ்வரா் சந்நதி, வேதநாயகி அம்மன் சந்நதி மற்றும் ஆதிகேசவப் பெருமாள் சந்நதிகளில் தீப கம்பத்தில் தீபம் ஏற்றப்பட்டது. தொடா்ந்து, நந்தி வாகனத்தில் வேதநாயகி அம்மன் உடனமா் சங்கமேஸ்வரா், கருட வாகனத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஆதிகேசவப் பெருமாள் எழுந்தருளினா். இதையடுத்து, சிறப்பு வழிபாடுகளுடன் ராஜ கோபுரத்தின் முன்பாக சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.
இதேபோன்று, காவேரி வீதி காசி விஸ்வநாதா் கோயிலிலும் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. அம்மாபேட்டை காவிரிக்கரை மீனாட்சி உடனமா் சொக்கநாதா் கோயிலில் சொக்கப்பனை கொளுத்தி வழிபாடு நடத்தப்பட்டது. இதில், அம்மாபேட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் கலந்து கொண்டனா்.