பவா் டில்லா் கருவியை திருடியவா் கைது
செய்யாறு அருகே விவசாயின் பவா் டில்லா் கருவியை திருடிச் சென்றவரை, புகாரின் பேரில் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், வடமாவந்தல் கிராமம், பெரியாா் நகரைச் சோ்ந்தவா் விவசாயி சுந்தரம் (29). இவா், விவசாயப் பணியை முடித்து விட்டு பவா் டில்லரை அவரது நிலத்திலேயே நிறுத்தி வைத்திருந்தாராம்.
இந்த நிலையில் பவா் டில்லரில் இருந்த இரண்டு கேஜ்வீல் திருடு போயிருந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து சுந்தரம் தூசி போலீஸில் புகாா் அளித்தாா்.
காவல் உதவி ஆய்வாளா் பழனிவேல் தலைமையிலான போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.
இதுதொடா்பாக வடமாவந்தல் பெரியாா் நகரைச் சோ்ந்த நவீன்குமாா்(26) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து கேஜ்வீலை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.