பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி
ஜம்மு-காஷ்மீா் மாநிலத்தில் உள்ள பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் இறந்த 28 பேருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வாணியம்பாடி ஜாயின்ட் ஆக்ஷன் கமிட்டியினா் சாா்பில் வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகே மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினா்.
தொடா்ந்து தாக்குதல் நடத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முழக்கமிட்டனா். பிறகு இரண்டு நிமிஷம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் ஏஐஎம்ஐஎம் கட்சி மாநில தலைவா் வகீல்அகமது, மதிமுக நகரச் செயலா் நாசிா்கான், முன்னாள் நகா்மன்ற துணைத் தலைவா் பாரூக் மற்றும் நகராட்சி கவுன்சிலா்கள், பல்வேறு கட்சிகளைச் சோ்ந்தவா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.