செய்திகள் :

``பஹல்காம் தாக்குதல் நடத்தியவர்கள் பாகிஸ்தானில் இருந்து வந்தார்களா? ஆதாரம் இருக்கா?'' - பா.சிதம்பரம்

post image

மத்தியில் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க அரசை பல்வேறு வகையில் சிக்கலில் ஆழ்த்தியிருக்கும் விவகாரங்களில் ஒன்று `ஆப்ரேஷன் சிந்தூர்' தாக்குதல். ஒருபக்கம் 'இந்தியா - பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன்' என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து பேசி வரும் நிலையில், எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.

பா.சிதம்பரம்
பா.சிதம்பரம்

சமீபத்தில் காங்கிரஸ் முத்த தலைவர் பா.சிதம்பரம் தி குயின்ட் செய்தி நிறுவனத்திற்கு அளித்திருக்கும் பேட்டியில், ``பயங்கரவாத தாக்குதல் நடத்தியவர்கள் எங்கே? அவர்களை ஏன் கைது செய்யவில்லை. இன்னும் அவர்களை அடையாளம் கூட கண்டுபிடிக்கவில்லையே ஏன்? தாக்குதல் நடத்தியவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த சிலர் கைது செய்யப்பட்டதாக ஒரு செய்தி வெளியானது. அவர்களிடம் விசாரணை நடத்தினார்களா? அந்தத் தகவல் ஏன் வெளியாகவில்லை. அவர்களுக்கு என்னவானது?

பாதுகாப்புப் படைத் தலைவர் (CDS) சிங்கப்பூர் சென்று சில தகவல்களைத் தரும் அறிக்கையை வெளியிடுகிறார். துணை ராணுவத் தலைவர் மும்பையில் ஒரு அறிக்கையை வெளியிடுகிறார். இந்தோனேசியாவில், கடற்படையின் துணை அதிகாரி ஒருவர் ஒரு அறிக்கையை வெளியிடுகிறார். இந்த ஆப்ரேஷன் சிந்தூர் தாக்குதலில் தொடர்புடைய அதிகாரிகள் ஒவ்வொருவரும் ஒவ்வொருமாதிரியான அறிக்கைகளை வெளியிடுகிறார்கள்.

ஆனால் பிரதமரோ, பாதுகாப்பு அமைச்சரோ, வெளியுறவு அமைச்சரோ ஏன் விரிவான அறிக்கையை வெளியிடவில்லை? அரசாங்கம் எதை மறைக்க முயற்சிக்கிறது. இத்தனை வாரங்களாக NIA என்ன செய்தது? செய்கிறது? என்பதைக்கூட அவர்கள் வெளியிடாதது ஏன்?

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

பயங்கரவாதிகளை NIA அடையாளம் கண்டிருக்கிறார்களா? அவர்கள் எங்கிருந்து வந்தார்கள்? நமக்குத் தெரிந்தவரை, அவர்கள் உள்நாட்டு பயங்கரவாதிகளாக இருக்கலாம்...

அவர்கள் பாகிஸ்தானிலிருந்து வந்தவர்கள் என எதன் அடிப்படையில் கருதுகிறீர்கள்? அதற்கு ஏதேனும் ஆதாரம் இருக்கிறதா? அதேப்போல, இந்தப் போரில் நமக்கு ஏற்பட்ட இழப்புகளையும் மறைக்கிறார்கள். எதுவானாலும் வெளிப்படையாகச் சொல்லுங்கள் என்றுதானே கேட்கிறோம்" என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

Bihar SIR: ``ஆதாரை குடியுரிமை ஆவணமாக ஏற்றுக்கொள்ளுங்கள்'' - உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

பீகாரில் 'சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த பணி' நடந்தது. அதில் தேர்தல் ஆணையம், 2003-ம் ஆண்டுக்கு பிறகு, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டவர்கள், தங்களது குடியுரிமையை நிரூபிக்க அதற்கான ஆவணங்கள... மேலும் பார்க்க

மேற்கத்திய நாடுகள் எதிர்த்தும், இந்தியா ஏன் ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்கிறது?

ரஷ்யா - உக்ரைன் போர் முற்றுப்பெறவில்லை என்றால், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சிரித்திருக்கிறார். ரஷ்யாவிடம் இருந்து கச்சா ... மேலும் பார்க்க

`பஹல்காம் தாக்குதல்' பா.சிதம்பரத்தின் பேச்சுக்கு பாஜக கடும் கண்டனம்!

பஹல்காம் தாக்குதல் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும் என்றத் தகவல் வெளியானதிலிருந்து காங்கிரஸ் முத்த தலைவர் பா.சிதம்பரத்தின் கேள்விகளும் நாடாளுமன்றத்தில் எழுப்பப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.... மேலும் பார்க்க

மலேசியாவில் பேச்சுவார்த்தை; தாய்லாந்து - கம்போடியா போர் சூழல் முடிவுக்கு வருமா?

எல்லைப் பிரச்னை காரணமாக தாய்லாந்து - கம்போடியா இடையே கடந்த வாரம் போர் தொடங்கியது. 'அவர்கள் தான் முதலில் தொடங்கினார்கள், இவர்கள் தான் முதலில் தொடங்கினார்கள்' என்று மாறி மாறி இரு நாடுகளும் குற்றம்சாட்டி... மேலும் பார்க்க

``சோழர்கள் வளர்த்த காவித்தமிழ்; ஸ்டாலின் ஏன் தனியார் ஆஸ்பத்திரிக்கு செல்கிறார்?'' - தமிழிசை கேள்வி

பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக தமிழகம் வரவிருக்கிறார். இன்றிரவு தூத்துக்குடி விமான நிலையம் வரவிருக்கும் அவரை வரவேற்க செல்கையில் தமிழிசை சௌந்தரராஜன் பத்திரிகையாளர்களை சந்தித்திருந்தார்.கங்கைகொண்ட சோழப... மேலும் பார்க்க

கங்கை கொண்ட சோழபுரம்: பிரதமர் மோடி வருகை, இளையராஜா சிம்பொனி இசை.. களைகட்டும் திருவாதிரை விழா!

மாமன்னன் இராஜேந்திர சோழனின் பிறந்தநாள் ஆடி திருவாதிரை விழாவாக கங்கை கொண்ட சோழபுரத்தில் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 23-ம் தேதி தமிழக அரசு சார்பில் இராஜேந்திர சோழன் திருவாதிரை விழா கொ... மேலும் பார்க்க