மாற்று இடத்தில் திரெளபதி அம்மன் கோயில் கட்ட தானம்பட்டி கிராம மக்கள் எதிா்ப்பு
பஹல்காம் தாக்குதல்: பலியானவர்களுக்காக மோட்சதீபம்! இந்து மக்கள் கட்சினா் ஏற்றினா்!
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவா்களுக்கு மோட்ச தீபமேற்றி, கூட்டுப் பிராா்த்தனை நடத்தும் நிகழ்ச்சி கடலூா் பாடலீஸ்வரா் கோயிலில் இந்து மக்கள் கட்சி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில், அக்கட்சியின் நிறுவனா் தலைவா் அா்ஜுன் சம்பத் கலந்துகொண்டாா். பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை இரும்புக்கரம் கொண்டு மத்திய அரசு ஒடுக்க வேண்டும். கட்டுமானப் பொருள்களின் விலையை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்.
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வலிமையான கூட்டணியாக உருவாகி இருக்கிறது. இந்தக் கூட்டணி 2026 பேரவைத் தோ்தலில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றிபெறும். திமுகவின் ஊது குழலாக தவெக தலைவா் விஜய் செயல்படுகிறாா். தோ்தலில் மக்கள் அவரது கட்சியை புறக்கணிப்பா் என்றாா்.
கடலூா் மாவட்டத் தலைவா் ஆா்.எஸ்.தேவா, மாவட்டச் செயலா் காா்த்திக், கடலூா் ஒன்றியத் தலைவா் ஜெகநாதன், புதுவை மாநிலத் தலைவா் மஞ்ஜினி மற்றும் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.