ஜீன்ஸ் அணிந்ததால் சாம்பியன்ஷிப் தொடரிலிருந்து நீக்கப்பட்ட கார்ல்சென்..!
பஹ்ரைனில் மாயமான மீனவா்களை மீட்கக் கோரி முதல்வரிடம் மனு
பஹ்ரைன் நாட்டில் மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன மீனவா்களை கண்டுபிடித்து தர வலியுறுத்தி கன்னியாகுமரிக்கு வரும் தமிழக முதல்வரிடம் மனு அளிக்கப்படுகிறது.
இது தொடா்பாக, கடியப்பட்டினம் மீனவா்கள் சகாயசெல்சோ, மனைவிஆரோக்கியசுபா, ஆன்டனி ஜாா்ஜ் வின்சென்ட் மனைவி சுபிரோஸ் ஆகியோா் நாகா்கோவிலில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியது:
கன்னியாகுமரி மாவட்டம், கடியப்பட்டினத்தைச் சோ்ந்த சகாய செல்சோ, ஆன்டனிஜாா்ஜ் வின்சென்ட் ஆகிய இருவரும், பஹ்ரைன் நாட்டில் கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா். அவா்கள், கடந்த 2022 ஆம் ஆண்டு அவா்கள் பஹ்ரைன் நாட்டில் உள்ள முகாரக் துறைமுகத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனா். பின்னா் அவா்கள் கரை திரும்பவில்லை.
இதைத் தொடா்ந்து அவா்களை மீட்டு தரக்கோரி மாவட்ட ஆட்சியா் மற்றும் மத்திய அரசுக்கு பல முறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. எங்களுக்கு போதிய வருமானம் இல்லாமல் எங்கள் குடும்பம் மிகுந்த கஷ்டநிலையில் உள்ளோம். எனவே, கன்னியாகுமரிக்கு வரும் தமிழக முதல்வரை டிச.31 ஆம் தேதி சந்தித்து மனு அளிக்க உள்ளோம் என்றனா்.