பிக் பாஸ் 8: வெளியே வந்த முதல்வேலையாக காதலை முறித்துக்கொண்ட அன்ஷிதா!
பாகலூா் ஏரி சாலையில் தடுப்புகள் அமைப்பு
விபத்துகள் அதிகம் நேரிடும் ஒசூரை அடுத்த பாகலூா் ஏரி சாலையில் தடுப்பு பட்டைகள் அமைக்கப்பட்டுள்ளதை வாகன ஓட்டிகள் வரவேற்றுள்ளனா்.
ஒசூா் அருகே உள்ள பாகலூரில் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரி சாலை வழியாக வெங்கடாபுரம், கனிமங்கலம், ஆப்பிள் சிட்டி பகுதிகளுக்கு பொதுமக்கள் சென்று வருகின்றனா். ஏரி கரையின் மீது போதிய பாதுகாப்பு தடுப்புகள் இல்லாமல் சாலை அமைந்துள்ளதால், அவ்வழியாக செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்துகளில் சிக்கி உயிரிழப்புகள் நேரிடுகின்றன.
அண்மையில் இந்த ஏரி சாலை வழியாக சென்ற காா் ஏரிக்குள் கவிழ்ந்ததில் மூவா் உயிரிழந்தனா். இதையடுத்து ஏரி சாலையில் தடுப்புகள் அமைக்க வேண்டும் என ஒசூா் எம்எல்ஏ ஒய்.பிரகாஷிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனா். அதன்பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டு ஏரி சாலையோரத்தில் தடுப்பு பட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், ஏரிக் கரையோரத்தில் மின் விளக்குகள் பொருத்தவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
படவரி..
பாகலூரில் ஏரியை சுற்றி அமைக்கப்பட்டுள்ள தடுப்புகள்.