Amritsar: இருள் சூழ்ந்த பஞ்சாப் அமிர்தசரஸ்; 'அச்சம் வேண்டாம்' - காவல்துறை விளக்க...
பாகிஸ்தானிலிருந்து அலை அலையாய் ஏவப்பட்ட ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன: விமானப்படை தளபதி
புது தில்லி: பாகிஸ்தானிலிருந்து அலை அலையாய் ஏவப்பட்ட பெரும்பாலான ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக விமானப்படை நடவடிக்கைகளின் தலைமை இயக்குநர் ஏர் மார்ஷல் ஏ. கே. பாரதி தெரிவித்தார்.
ஆபரேஷன் சிந்தூர் குறித்து அவர் பேசியதாவது: “நமது 7 நகரங்களில் விமானப்படை தளங்களைக் குறிவைத்து பாகிஸ்தானிலிருந்து அலை அலையாய் ஏவப்பட்ட பெரும்பாலான ட்ரோன்களையும் ஆளில்லா சிறிய ரக விமானங்களையும் இந்திய வான் வெளி பாதுகாப்பு அமைப்புகளான ’பேச்சோரா’, ‘சமர்’ ஆகியவற்றால் வெற்றிகரமாகச் சுட்டு வீழ்த்தப்பட்டன. இங்குள்ள அமைப்புகளுக்கு எவ்வித சேதமும் உண்டாகவில்லை” என்றார்.
இதையும் படிக்க:ஆபரேஷன் சிந்தூரில் 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் பலி! - முப்படை அதிகாரிகள்