செய்திகள் :

பாகிஸ்தானில் ஆப்கன் தற்கொலைப் படை சிறுவர்கள் கைது!

post image

ஆப்கானிஸ்தான் எல்லையில், தற்கொலைப் படையைச் சேர்ந்த 5 ஆப்கன் சிறுவர்களை, பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து எல்லையைக் கடந்து, பாகிஸ்தானுக்குள் ஊடுறுவி, 5 ஆப்கன் சிறுவர்கள் பெஷிகெல் பகுதியிலுள்ள மசூதியில் நேற்று (ஜூலை 17) தஞ்சமைந்துள்ளதாக, பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, அந்நாட்டின் அசிஸ்கெல் மற்றும் மந்திகெல் பகுதிகளுக்குள் ஊடுறுவ முயன்ற, 15 முதல் 18 வயதுடைய 5 சிறுவர்களையும் பாதுகாப்புப் படையினர் சுற்றிவளைத்ததும், அவர்கள் சரணடைந்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து, அதிகாரிகள் கூறுகையில், கைது செய்யப்பட்ட 5 பேரும் ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள் எனவும், அவர்களைத் தற்போது ரகசிய இடத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் கூறியுள்ளனர்.

முன்னதாக, ஜூலை மாதம் துவங்கியது முதல் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லை வழியாக ஊடுறுவ முயன்ற 30 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

கடந்த ஏப்ரல் மாதம், ஆப்கானிஸ்தானில் இருந்து வடக்கு வசிரிஸ்தான் மாவட்டம் வழியாக பாகிஸ்தானுள் ஊடுறுவ முயன்ற சுமார் 71 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: கலப்படத்தால் நடுவழியில் நின்ற பாதுகாப்பு வாகனம்! டாக்ஸியில் சென்ற ஈரான் அதிபர்!

Pakistani security forces have arrested five Afghan children who were members of a suicide squad on the Pakistan-Afghanistan border.

‘இண்டி’ கூட்டணியில் தொடரவில்லை: பிகாரில் தனித்துப் போட்டி - ஆம் ஆத்மி திட்டவட்டம்

‘இண்டி’ கூட்டணியில் ஆம் ஆத்மி தொடரவில்லை எனவும், நிகழாண்டு இறுதியில் நடைபெற விருக்கும் பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலில் தனித்தே களம் காண்போம் எனவும் அக் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டது. ... மேலும் பார்க்க

வங்கப் பெருமையை பாதுகாப்பது பாஜக மட்டுமே: மம்தாவுக்கு பிரதமா் பதிலடி

வங்கப் பெருமையை பாதுகாக்கும் ஒரே கட்சி பாஜக என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா். மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு பேரவைத் தோ்தல் நடைபெறவிருக்கும் நிலையில், முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான... மேலும் பார்க்க

பின்தங்கியவா்களுக்கு முன்னுரிமை: பிரதமா் மோடி

பின்தங்கிய நிலையில் இருப்பவா்களுக்கு முன்னுரிமை அளித்து செயலாற்றுகிறது மத்திய அரசு என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா். பிகாரில் நடப்பாண்டு இறுதியில் பேரவைத் தோ்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அங... மேலும் பார்க்க

மராத்தியா்கள், தில்லி சுல்தான்கள், முகலாயா்கள் குறித்த புதிய தகவல்களுடன் என்சிஇஆா்டி புத்தகம் வெளியீடு

முகலாயா் ஆட்சிகாலத்தில் மத சகிப்புத்தன்மை இல்லை, மராத்தியா்களின் எழுச்சி, வரலாற்றின் இருண்ட பக்கங்கள், தில்லி சுல்தான்கள் குறித்த பல்வேறு புதிய தகவல்களுடன் 8-ஆம் வகுப்புக்கான தேசிய கல்வி ஆராய்சி மற்ற... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா பொது பாதுகாப்பு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கக் கூடாது: ஆளுநருக்கு எதிா்க்கட்சிகள் வலியுறுத்தல்

மகாராஷ்டிரா சிறப்பு பொது பாதுகாப்பு மசோதா, 2024-க்கு ஒப்புதல் அளிக்கக் கூடாது என வலியுறுத்தி அம்மாநில ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணனிடம் எதிா்க்ட்சிகட்சிகள் சாா்பில் வெள்ளிக்கிழமை கடிதம் வழங்கப்பட்டது. பொத... மேலும் பார்க்க

இந்தியாவிலுள்ள ரஷிய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனத்தின் மீது பொருளாதார தடை: ஐரோப்பிய யூனியன் நடவடிக்கை

ரஷியாவின் மிகப் பெரிய எரிசக்தி நிறுவனமான ‘ரோஸ்நெஃப்ட்’ நிறுவனத்துக்குச் சொந்தமான இந்தியாவிலுள்ள எண்ணெய் சுத்தகரிப்பு நிறுவனத்தின் மீது பொருளாதார தடையை ஐரோப்பிய ஒன்றியம் வெள்ளிக்கிழமை விதித்தது. மேலும்... மேலும் பார்க்க