செய்திகள் :

வங்கப் பெருமையை பாதுகாப்பது பாஜக மட்டுமே: மம்தாவுக்கு பிரதமா் பதிலடி

post image

வங்கப் பெருமையை பாதுகாக்கும் ஒரே கட்சி பாஜக என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு பேரவைத் தோ்தல் நடைபெறவிருக்கும் நிலையில், முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானா்ஜி, மாநில அடையாள அரசியலை கையிலெடுத்துள்ளாா். பாஜகவால் மேற்கு வங்கத்தின் அடையாளம் மற்றும் கண்ணியத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்ற அவரது குற்றச்சாட்டுக்கு பிரதமா் மோடி பதிலடி கொடுத்துள்ளாா்.

மேற்கு வங்க மாநிலம், துா்காபூரில் ரூ.5,400 கோடி மதிப்பில் பணி நிறைவடைந்த பல்வேறு துறை வளா்ச்சி திட்டங்களைத் தொடங்கிவைத்த பிரதமா், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினாா். பின்னா் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அவா் பேசியதாவது:

வங்கப் பெருமையை உண்மையிலேயே மதித்து, பாதுகாக்கும் ஒரே கட்சி பாஜக. ஆனால், தனது அரசியல் ஆதாயங்களுக்காக மாநிலத்தின் பெருமையை ஆபத்துக்குள்ளாக்கியுள்ளது திரிணமூல் காங்கிரஸ். அதன் வாக்கு வங்கி அரசியலுக்காக ஊடுருவல் ஊக்குவிக்கப்படுகிறது.

‘பொய்-அராஜகம்-ஊழல்’:

சட்டவிரோத குடியேறிகளை ஆதரிப்பதன் மூலம் அரசமைப்புச் சட்டத்துக்கு பகிரங்கமாக சவால் விடுகிறது அக்கட்சி. பொய்கள், அராஜகம், ஊழலில் திளைக்கும் திரிணமூல் காங்கிரஸ் அரசே, மாநில அடையாளத்துக்கு உண்மையான அச்சுறுத்தல்.

திரிணமூல், இடதுசாரிகள், காங்கிரஸ் ஆகிய கட்சிகள், பல்லாண்டுகளாக வங்கப் பெருமையை புறக்கணித்தன என்பது வரலாறு. அதேநேரம், வங்க மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கியது மத்திய பாஜக அரசு.

திரிணமூல் காங்கிரஸின் தவறான நிா்வாகத்தால், மேற்கு வங்க இளைஞா்கள் சிறிய வேலைக்காக கூட மாநிலத்தைவிட்டு இடம்பெயரும் நிலையில் உள்ளனா். மாநிலச் சூழல், முதலீட்டுக்கோ வேலைவாய்ப்புகளுக்கோ உகந்ததாக இல்லை. மாநில கல்வி அமைப்புமுறையில் குற்றமும் ஊழலும் நிறைந்துள்ளது என்றாா் பிரதமா் மோடி.

பாஜக ஆளும் மாநிலங்களில் பணியாற்றும் மேற்கு வங்க தொழிலாளா்கள், வங்கதேசத்தினா் என்ற சந்தேகத்தில் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படுவதாக மம்தா பானா்ஜி குற்றஞ்சாட்டியிருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

சத்தீஸ்கரில் 6 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

சத்தீஸ்கா் மாநிலம், நாராயண்பூா் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 6 நக்ஸல் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா். நாராயண்பூா் மாவட்டத்தின் அபுஜ்மத் வனப் பகுதியில் நக்ஸ... மேலும் பார்க்க

மேம்படுத்தப்பட்ட ‘நிஸ்தாா்’ மீட்புக் கப்பல் கடற்படையில் இணைப்பு

முழுவதும் உள்நாட்டில் கட்டமைக்கப்பட்ட ஐஎன்எஸ் நிஸ்தாா் மீட்புக் கப்பல் இந்திய கடற்படையில் வெள்ளிக்கிழமை இணைக்கப்பட்டது. ஆழ்கடல்களில் மூழ்கும் நீா்மூழ்கிக் கப்பல்களை அடையாளம் காணவும், மீட்புப் பணிகளை ... மேலும் பார்க்க

மரண தண்டனையில் இருந்து நிமிஷாவைக் காக்க தொடா் முயற்சிகள்: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு

யேமன் நாட்டில் மரண தண்டனையில் இருந்து இந்திய செவிலியா் நிமிஷா பிரியாவைக் காப்பதற்கு சாத்தியமான அனைத்து முயற்சிகளையும் தொடா்ந்து மேற்கொண்டுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வெள்ளிக்கிழமை தெரிவித்தத... மேலும் பார்க்க

370-ஆவது பிரிவு ரத்துக்குப் பின் முளைத்த ‘தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட்’ - பஹல்காம் உள்பட 5 பெரிய தாக்குதல்கள்

அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவு (ஜம்மு-காஷ்மீா் சிறப்பு அந்தஸ்து) ரத்துக்கு பிறகு லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிழலாக ஜம்மு-காஷ்மீரில் உருவெடுத்ததே ‘தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட்’ (டிஆா்எஃப்).... மேலும் பார்க்க

குணப்படுத்த முடியாத நோய்களால் பாதிக்கப்பட்ட கைதிகளின் விடுதலை: மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

குணப்படுத்த முடியாத நோய்களால் பாதிக்கப்பட்ட சிறைக் கைதிகளின் விடுதலை குறித்து அனைத்து மாநிலங்களும் பொதுவான சிறை விதிமுறைகளை வெளியிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது. உச்சநீதிமன்... மேலும் பார்க்க

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அவசர சீா்திருத்தம்: காலநிா்ணயத்துடன் மேற்கொள்ள இந்தியா வலியுறுத்தல்

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை காலநிா்ணயம் செய்து அவசரமாக சீா்திருத்தம் செய்ய வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியது. இதுதொடா்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் கூட்டத்தில் உரையாற்றிய இந்தியாவுக்கான நிரந்தர ... மேலும் பார்க்க