பாகிஸ்தானில் ஒரே வாரத்தில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
பாகிஸ்தானில் கடந்த ஒரு வாரத்தில் மூன்று வெவ்வேறு நடவடிக்கைகளில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானின் பஜௌர் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக வந்த உளவுத்துறையின் தகவல் அடிப்படையில் பாதுகாப்புப் படையினர் அங்கு தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, 3 பயங்கரவாதிகள் பாதுகாப்புப்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இதேபோல் வடக்கு வஜிரிஸ்தான் மாவட்டத்தில் உள்ள டோசலி பகுதியில் மற்றொரு நடவடிக்கையில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அதேசமயம் மொஹ்மந்த் மாவட்டத்தில் நடந்த மூன்றாவது நடவடிக்கையில், பயங்கரவாதி மறைவிடத்தை அழித்து இரண்டு பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர்.
பாகிஸ்தானுடன் அனைத்து வகையான அஞ்சல் மற்றும் பார்சல் போக்குவரத்துக்குத் தடை
மேலும் இந்த நடவடிக்கைகளின்போது பயங்கரவாதிகளிடமிருந்து ஏராளமான ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் வெடிபொருட்களும் மீட்கப்பட்டன. இதனிடையே கடந்த ஒரு வாரத்தில் 5 பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்ற பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கையை பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் பாராட்டினார்.