Operation Sindoor: உ.பியில் 17 பெண் குழந்தைகளுக்கு 'சிந்தூர்' என்று பெயர் சூட்டி...
பாகிஸ்தானுக்கு புதிய பயிற்சியாளர்; 2023-லிருந்து ஐந்தாவது முறை பயிற்சியாளர் மாற்றம்!
பாகிஸ்தான் அணியின் வெள்ளைப் பந்து போட்டிகளுக்கான புதிய தலைமைப் பயிற்சியாளரை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (மே 13) நியமித்துள்ளது.
கடந்த ஓரிரு ஆண்டுகளாகவே பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அந்த அணியின் பயிற்சியாளர்களை தொடர்ச்சியாக மாற்றி வருகிறது. அந்த வரிசையில், பாகிஸ்தான் அணியின் வெள்ளைப் பந்து போட்டிகளுக்கான (ஒருநாள், டி20) புதிய பயிற்சியாளராக நியூசிலாந்தின் மைக் ஹெஸ்ஸன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிக்க: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!
வருகிற மே 26 ஆம் தேதியுடன் பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் தொடர் நிறைவடையும் நிலையில், அந்த தொடர் நிறைவடைந்த பிறகு பாகிஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளராக அவர் பொறுப்பேற்றுக் கொள்ளவுள்ளார்.
பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் பொறுப்புக்கு 7 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், மைக் ஹெஸ்ஸன் அந்த பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் நடப்பு சாம்பியனான இஸ்லமாபாத் யுனைட்டட் அணியின் பயிற்சியாளராக மைக் ஹெஸ்ஸன் செயல்பட்டு வருகிறார். ஐபிஎல் தொடரில் பயிற்சியாளராக செயல்பட்ட அனுபவமும் அவருக்கு இருக்கிறது.
கடந்த 2023 ஆம் ஆண்டிலிருந்து பாகிஸ்தான் அணியின் ஐந்தாவது வெளிநாட்டு தலைமைப் பயிற்சியாளராக மைக் ஹெஸ்ஸன் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு முன்பாக, கிராண்ட் பிராட்பர்ன், மிக்கி ஆர்தர், சைமன் ஹெல்மட், கேரி கிரிஸ்டன் மற்றும் ஜேசன் கில்லெஸ்பி ஆகியோர் பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர்களாக செயல்பட்டுள்ளனர்.
இதையும் படிக்க: விராட் கோலியின் ஓய்வால் பாதுகாப்பாக இருக்கும் சச்சினின் சர்வதேச சாதனை!
பிராட்பர்ன், ஆர்தர், கிறிஸ்டன் மற்றும் கில்லெஸ்பி அவர்களது பதவிக்காலம் நிறைவடையும் முன்பே பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலகினர். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடன் இணைந்து செயல்படுவதில் மகிழ்ச்சியாக இல்லை எனக் கூறி அவர்கள் தங்களது பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.