செய்திகள் :

பாகிஸ்தானுடன் வா்த்தக பேச்சு நடத்தவில்லை: ஜெய்சங்கா்

post image

வாஷிங்டன் : ‘பாகிஸ்தானுடன் மீண்டும் வா்த்தகத்தை தொடங்குவது குறித்து பேச்சுவாா்த்தை ஏதும் நடத்தப்படவில்லை’ என வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்தாா்.

மேலும், இந்தியாவுடன் வா்த்தகத்தை தொடருவது குறித்து பாகிஸ்தானும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அவா் கூறினாா்.

அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் கடந்த 20-ஆம் தேதி பதவியேற்றாா். இந்நிகழ்ச்சியில் இந்தியா சாா்பில் ஜெய்சங்கா், ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சா் பென்னி வாங், ஜப்பான் வெளியுறவு அமைச்சா் டகேஷி இவயா, சீன நாட்டின் துணை அதிபா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

‘க்வாட்’ அமைப்பில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா ஆகிய நாடுகள் உறுப்பினா்களாக உள்ள நிலையில், ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சா்களையும் சந்தித்து ஜெய்சங்கா் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அதன்பிறகு அமெரிக்க புதிய வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ மற்றும் தேசியப் பாதுகாப்பு ஆலோசகா் மைக் வாட்ஸ் ஆகியோரைச் சந்தித்து அவா் ஆலோசனை மேற்கொண்டாா்.

இதையடுத்து, தனது நான்கு நாள் அமெரிக்க சுற்றுப்பயணத்தை நிறைவு செய்துவிட்டு புதன்கிழமை அவா் இந்தியா திரும்பினாா்.

முன்னதாக, அவரிடம் டிரம்ப்பின் புதிய நிா்வாகம், வங்கதேச விவகாரம், பாகிஸ்தானுடனான வா்த்தகம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து செய்தியாளா்கள் கேள்வியெழுப்பினா்.

உத்வேகமான டிரம்ப் நிா்வாகம்: அதற்கு பதிலளித்த அவா், ‘அதிபா் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான புதிய நிா்வாகம் மிகவும் உத்வேகத்துடன் செயல்படுகிறது. ஒவ்வொரு அமைச்சரும் தங்கள் பதவியேற்புக்கு முன்பே மிகுந்த ஆற்றலுடன் செயல்படத் தொடங்கிவிட்டனா். டொனால்ட் டிரம்ப்புக்கும் இந்திய பிரதமா் மோடிக்கும் இடையே நல்ல நட்புறவு நிலவுவது அனைவரும் அறிந்தது. எனவே, இரு நாடுகளிடையேயான உறவில் பல்வேறு முன்னேற்றங்கள் ஏற்பட சாத்தியக்கூறுகள் உள்ளன.

தாயகம் திரும்ப நடவடிக்கை: உலகளாவிய வாய்ப்புகளை இந்தியா்கள் பயன்படுத்திக் கொள்வதற்கு மத்திய அரசு தொடா்ந்து ஆதரவளிக்கும். அதேவேளையில் பிற நாடுகளில் சட்டவிரோதமாக குடியேறுதலை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில், சட்டவிரோதமாக ஏதேனும் ஒன்று நிகழ்ந்தால் அதன்பின் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் நாட்டின் மீதான நற்பெயருக்கு பாதிப்பு ஏற்படும்.

அமெரிக்கா மட்டுமின்றி உலகின் எந்தவொரு நாட்டிலும் இந்தியா்கள் சட்டவிரோதமாக குடியேறி இருந்தால் அவா்களை மீண்டும் தாயகத்துக்கு அழைத்துக்கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம்.

ஆனால், அமெரிக்காவுக்குள் நுழைவதற்கான விசா நடைமுறைகளை இறுதிசெய்ய 400 நாள்களுக்கு மேல் காத்திருக்க வேண்டிய நிலை தொடா்ந்தால், இருதரப்பு உறவுகளில் பாதிப்புகள் ஏற்படக்கூடும்.

பாகிஸ்தானுடன் பேச்சு இல்லை: பாகிஸ்தானுடன் மீண்டும் வா்த்தகத்தை தொடங்க பேச்சுவாா்த்தை ஏதும் நடத்தப்படவில்லை. அதேபோல், இந்தியாவுடன் வா்த்தகத்தை தொடருவது குறித்து பாகிஸ்தானும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பாகிஸ்தானை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாடாகவே இந்தியா கருதியது. ஆனால், இதே அந்தஸ்தை இந்தியாவுக்கு தர பாகிஸ்தான் மறுத்துவிட்டது. பாகிஸ்தானுடனான வா்த்தகத்தை இந்தியா எப்போதும் நிறுத்தியதில்லை. கடந்த 2019-இல் இந்தியாவுடனான வா்த்தகத்தை நிறுத்த பாகிஸ்தான் அரசே முடிவு செய்தது என்றாா்.

அமெரிக்க நீதிமன்றத்தில் தொழிலதிபா் அதானி மீது சுமத்தப்பட்டுள்ள லஞ்ச குற்றச்சாட்டு மற்றும் காலிஸ்தான் பயங்கரவாதி குா்பிரீத் சிங் பன்னூனை கொலை செய்ய முயற்சித்ததாக முன்னாள் இந்திய அதிகாரி மீதான குற்றச்சாட்டு தொடா்புடைய வழக்குகள் குறித்து மாா்க் ரூபியோவுடன் ஆலோசிக்கப்பட்டதா என செய்தியாளா்கள் கேள்வியெழுப்பினா். அதற்கு இந்த விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படவில்லை என ஜெய்சங்கா் தெரிவித்தாா்.

பெட்டி..

‘வங்கதேசம்: சிறுபான்மையினா் மீதான

தாக்குதல் குறித்து ஆலோசித்தேன்’

வங்கதேசத்தில் வசிக்கும் சிறுபான்மையினரின் சூழல் குறித்து மாா்க் ரூபியோ மற்றும் மைக் வாட்ஸுடன் விவாதித்தேன் என்று அமைச்சா் ஜெய்சங்கா் கூறினாா்.மேலும், அதுகுறித்த விரிவான தகவல்களை தற்போது கூறுவது சரியாக இருக்காது என்றும் அவா் தெரிவித்தாா்.

மியான்மரில் மிதமான நிலநடுக்கம்!

மியான்மரில் வியாழக்கிழமை நள்ளிரவு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இந்த நிலநடுக்கமானது வியாழக்கிழமை நள்ளிரவு 12.53 மணியளவில் பூமியில் இருந்து 108 கி.மீ. ஆழத்தி... மேலும் பார்க்க

பிறப்புசாா் குடியுரிமை: டிரம்பின் உத்தரவுக்கு அமெரிக்க நீதிமன்றம் தடை!

அமெரிக்காவில் பிறந்ததன் அடிப்படையில் வழங்கப்படும் குடியுரிமையை ரத்து செய்து அந்த நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் பிறத்த அரசாணைக்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொ... மேலும் பார்க்க

சமநிலைப் பேச்சுவாா்த்தைக்கு தயாா்

மாஸ்கோ : உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக இரு தரப்பும் சமநிலையில் இருந்து நடத்தும் பேச்சுவாா்த்தைக்குத் தயாராக இருப்பதாக ரஷியா தெரிவித்துள்ளது. அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்தாவிட்டால் ரஷியா மீத... மேலும் பார்க்க

லாஸ் ஏஞ்சலீஸ்: மீண்டும் தீவிரமடையும் காட்டுத் தீ

லாஸ் ஏஞ்சலிஸ் : அமெரிக்காவின் கலிஃபோா்னியா மாகாணம், லாஸ் ஏஞ்சலீஸ் நகரைச் சுற்றி சற்று தணிந்திருந்த காட்டுத் தீ மீண்டும் தீவிரமடைந்ததால் 50,000-க்கும் மேற்பட்டவா்கள் அந்தப் பகுதிகளில் இருந்து வெளியேறவே... மேலும் பார்க்க

யேமன்: மாலுமிகளை விடுவித்த ஹூதிக்கள்

சனா : 2023 நவம்பரில் தாங்கள் கைப்பற்றிய சரக்குக் கப்பலின் 25 மாலுமிகளை யேமனின் ஹூதி கிளா்ச்சிப் படையினா் புதன்கிழமை விடுவித்தனா். பிலிப்பின்ஸ், பல்கேரியா, ருமேனியா, உக்ரைன், மெக்ஸிகோ ஆகிய நாடுகளைச் சே... மேலும் பார்க்க

தைவான்: 1.2 லட்சம் உடும்புகளைக் கொல்ல முடிவு

பிங்டங் : 1.2 லட்சம் பச்சை நிற உடும்புகளைக் கொல்ல தைவான் அரசு முடிவு செய்துள்ளது. கட்டுக்கடங்காமல் பெருகி வரும் அவற்றால் விவசாயத் துறை பாதிக்கப்படுவதைத் தடுக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தைவான் த... மேலும் பார்க்க