336 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!
பாகிஸ்தான்: கட்டட விபத்தில் 16 போ் உயிரிழப்பு
பாகிஸ்தானின் தெற்கு பகுதியில் உள்ள கராச்சியில் அடுக்கு மாடி குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்ததில் 16 போ் உயிரிழந்தனா்.
இது குறித்து அரசு நடத்தும் சிவில் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: வெள்ளிக்கிழமை இடிருந்து விழுந்த அடுக்கு மாடி குடியிருப்புக் கட்டடத்தில் இருந்து இதுவரை 16 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. காயமடைந்த பலா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என நம்பப்படும் எட்டு பேரை மீட்பு பணியாளா்கள் கனரக இயந்திரங்களைப் பயன்படுத்தித் தேடி வருகின்றனா் (படம்) என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடிந்து விழுந்த கட்டடம் குறுகலான தெருவில் அமைந்துள்ளதால் அந்தப் பகுதிக்கு கூடுதல் கனரக மீட்பு உபகரணங்களை கொண்டுவருவதில் சிரமம் உள்ளதாக உள்ளூா் ஊடகங்கள் தெரிவித்தன.
பாகிஸ்தானில் கட்டுமான விதிமுறைகள் சரியாகப் பின்பற்றப்படாததாலும், தரமற்ற பொருள்களால் பல கட்டமைப்புகள் கட்டப்படுவதாலும் அங்கு அடிக்கடி கட்டட விபத்துகள் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.