பாகிஸ்தான் தோல்விக்கு காரணம் கூறிய பயிற்சியாளர், தேர்வுக்குழு உறுப்பினர்!
பாகிஸ்தான் அணியின் இடைக்கால பயிற்சியாளர் தோல்விக்கு காரணம் 2 வீரர்கள் காயத்தினால் வெளியேறியதே எனக் கூறியுள்ளார்.
நடப்பு சாம்பியனனான பாகிஸ்தான் அணி சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளை நடத்துகின்றன. இந்திய அணிக்கான போட்டிகள் மட்டும் துபையில் நடைபெறுகின்றன.
பாகிஸ்தான் அணி 2 போட்டிகளிலும் தோல்வியுற்று அரையிறுதி வாய்ப்பை இழந்தது.
இதனால் பலரும் பாகிஸ்தான் அணியை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
இது குறித்து பாகிஸ்தான் அணியின் இடைக்கால தலைமை பயிற்சியாளரும் தேசிய தேர்வுக்குழு உறுப்பினருமான ஆகிப் ஜாவேத் கூறியதாவது:
சிறப்பானவர்களையே தேர்வுக்குழு தேர்ந்தெடுத்துள்ளது
வீரர்களுக்கு போதிய அளவு ஊக்கம் இல்லை என்பது கவலையில்லை. இருக்கும் வீரர்களில் சிறப்பானவர்களையே தேர்வுக்குழு தேர்ந்தெடுத்துள்ளது.
சில வீரர்கள் அணிக்கு மிகவும் முக்கியமானவர்கள். சைம் அயூப், ஃபகார் ஸ்மான் இல்லாதது அணியில் தாக்கத்தை ஏற்படுத்தியது. அவர்கள் இல்லாத்தால் அதற்கேற்றார்போல் அணியை தேர்வு செய்ய வேண்டியிருந்தது.
ரசிகர்களும் கிரிக்கெட் வல்லுஞர்களும் டி20, ஒருநாள் போட்டி செயல்பாடுகளை கலவையாக சேர்த்து பேசுகிறார்கள். பல காரணங்களால் இந்தியா, பாகிஸ்தான் போட்டி உணர்ச்சிகரமாக இருக்கின்றன. அது ரசிகர்களை புண்படுத்தும் விதமாக அமைந்துவிட்டது வருந்தத்தக்கது என்றார்.