IND vs ENG: "கடைசி ஒரு மணி நேரத்தில்..." - தோல்வி குறித்து கில் பேசியதென்ன?
பாகுபலி, ஜவான் சாதனையை முறியடித்த ஒடியா படம்!
பு பட்டு பூட்டா திரைப்படம் ஒடியாவில் அதிகம் வசூலித்த திரைப்படம் என்கிற சாதனையைப் பெற்றுள்ளது.
இந்திய சினிமாவின் வரலாறு நூறாண்டைக் கடந்தாலும் சில மாநிலங்களில் சினிமாவின் வளர்ச்சி உருவாக்க ரீதியாகவும் வணிக ரீதியாகவும் பின் தங்கியே இருக்கின்றன.
அப்படி, ஒடிசா மாநிலத்தில் உருவாக்கப்படும் சினிமா, தொடர்கள், ஆல்பம் பாடல்கள் இப்போதுதான் ரசிக்கும் பாணிகளில் உருவாகி வருகின்றன.
அந்த வகையில், கடந்த ஜூன் 12 ஆம் தேதி ஒடியா மொழியில் ஜெகதீஸ் மிஸ்ரா இயக்கத்தில் பாபுஷன் மோகந்தி, அபாரஜித்தோ மோகந்தி நடிப்பில், ‘பு பட்டு பூட்டா - bou buttu bhuta’ (அம்மா, மகன் மற்றும் பேய்) என்கிற திரைப்படம் வெளியானது.
ஹாரர் பின்னணியில் அமானுஷ்யங்களை உள்ளடக்கிய கதையாக உருவான இப்படம், ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றதுடன் இதுவரை ரூ. 16 கோடி வரை வசூலித்துள்ளதாம்.
இதுவே, ஒடியா மொழியில் அதிகம் வசூலித்த திரைப்படம் என்கின்றனர். இதற்கு முன், அங்கு பாகுபலி, ஜவான் ஆகிய படங்கள் ஓரளவு வணிகம் செய்திருந்த நிலையில், மீண்டும் மீண்டும் ரசிகர்கள் பு பட்டு பூட்டா படத்தைப் பார்ப்பதால் மிகப்பெரிய வணிக வெற்றியை அடைந்துள்ளதாம்.
#BouButtuBhuta
— Nandhan Talkz ✨ (@Nandhan_Talkz) July 14, 2025
தமிழை தாண்டி ஒரு படத்தோட OTT ரிலீசுக்கு வெயிட்டிங்னா அது இந்த படத்துக்கு தான் ✌️
சீக்கிரம் வரனும், வந்ததுமே பாக்கனும் pic.twitter.com/ifBQoQMsjQ
படத்தில் இடம்பெற்ற சில காட்சிகள் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளதால் இப்படத்தின் ஓடிடி வெளியீட்டுகாக பலரும் காத்திருக்கின்றனர்.
இதையும் படிக்க: சரோஜா தேவி ஏன் ஒரு நடிகரைத் திருமணம் செய்யவில்லை?