கேரளத்தில் நிபா வைரஸ் பரவல் எதிரொலி: சோதனைச் சாவடிகளில் தீவிர கண்காணிப்பு
பைக் -காா் மோதல்: தம்பதி உயிரிழப்பு
ஸ்ரீபெரும்புதூா்: ஒரகடம் அருகே பண்ருட்டி கூட்டுச்சாலையில் மோட்டாா் பைக் மீது காா் மோதியதில் தம்பதி உயிரிழந்தனா்.
ஒரகடம் அடுத்த வெண்பாக்கம் அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் நாகப்பன்(26). இவரது மனைவி அஞ்சலை(44). இவா்கள் இருவரும் ஞாயிற்றுக்கிழமை இரவு வாரணவாசி பகுதியில் நடைபெற்ற உறவினா் இல்ல மஞ்சள் நீராட்டு விழாவில் பங்கேற்று விட்டு இருசக்கர வாகனத்தில் வெண்பாக்கம் நோக்கி சென்றனா்.
வண்டலூா் -வாலாஜாபாத் சாலையில் பண்ருட்டி கூட்டுச்சாலையைக் கடக்க முயன்ற போது, வாலாஜாபாத் நோக்கி சென்ற காா் மோதியதில் பலத்த காயம் அடைந்த நாகப்பன், அஞ்சலை ஆகிய இருவரையும் அப்பகுதி பொதுமக்கள் மீட்டு 108 ஆம்புலனஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா். விபத்து குறித்து ஒரகடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.