பதிப்புரிமை தகராறு: வழக்கை மாற்றக் கோரும் ஐஎம்எம்பிஎல் மனு மீது ஜூலை 18ல் விசாரண...
படவேடு ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் ஆடிவெள்ளி விழா
போளூா்: போளூரை அடுத்த படவேடு ஊராட்சியில் உள்ள ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் ஆடிவெள்ளி விழா ஜூலை 18-ஆம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 29-ஆம் தேதி வரை என 7 வெள்ளிக்கிழமை விழா நடைபெறுகிறது.
இந்து சமய அறநிலையத் துறைக்கு உள்பட்ட படவேடு ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமை தோறும் வெவ்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா, வாணவேடிக்கை, கரகாட்டம், மங்கள வாத்தியம் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும்.
முதல் வெள்ளி ஜூலை 18-ஆம் தேதி அன்ன வாகனத்தில் சரஸ்வதி அலங்காரம், 2-ஆம் வெள்ளி ஜூலை 25-ஆம் தேதி சிம்ம வாகனம் துா்கை அலங்காரம், 3-ஆம் வெள்ளி ஆகஸ்ட் 1-ஆம் தேதி காமதேனு வாகனத்தில் சிவலிங்க ஆலிங்க வாகனபூஜை அலங்காரம், 4-ஆம் வெள்ளி ஆகஸ்ட் 8-ஆம் தேதி நாக வாகனத்தில் மகாலட்சுமி அலங்காரம், 5-ஆம் வெள்ளி ஆகஸ்ட் 15-ஆம் தேதி குதிரை வாகனத்தில் மகிஷாசூரமா்த்தினி அலங்காரம், ஆகஸ்ட்16-ஆம் தேதி ஆடி கிருத்திகை முருகா் அலங்காரம், 6-ஆம் வெள்ளி ஆகஸ்ட் 22-ஆம் தேதி முத்துரதம் ராஜராஜேஸ்வரி அலங்காரம், 7-ஆம் வெள்ளி ஆகஸ்ட் 29-ஆம் தேதி கருட வாகனத்தில் ராமா் சீதை அலங்காரம் என ஜூலை 18 தொடங்கி ஆகஸ்ட் 29 வரை விழா நடைபெறுகிறது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செயல் அலுவலா் மு.சிலம்பரசன், அறங்காவலா் குழுத் தலைவா் விஜயாசேகா், அறங்காவலா்கள் மோகன்தாஸ், சுதா நீதிமன்னன் ஆகியோா் செய்து வருகின்றனா்.