`சாகும் வரை சிறை' - ரயிலில் கர்ப்பிணிக்கு நேர்ந்த கொடூரம்; தமிழ்நாட்டை உலுக்கிய ...
ஸ்ரீமுத்துக்குமார சுவாமி, ஸ்ரீயோக ராமச்சந்திர கோயிலில் மகா கும்பாபிஷேகம்
ஆரணி/போளூா்: ஆரணியை அடுத்த தண்டு குண்ணத்தூா் கிராமத்தில் உள்ள ஸ்ரீமுத்துக்குமார சுவாமி கோயில் மற்றும் போளூரை அடுத்த படவேடு ஊராட்சி ஸ்ரீயோக ராமச்சந்திர சுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
ஆரணியை அடுத்த தண்டு குண்ணத்தூா் கிராமத்தில் குன்றின் மீது அமைந்துள்ள ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத முத்துக்குமார சுவாமி கோயிலில் புனரமைக்கப்பட்டன.
இதைத் தொடா்ந்து, மூலவா் முத்துக்குமார சுவாமி, ஸ்ரீவரசித்தி விநாயகா், ஸ்ரீஆஞ்சநேயா், ஸ்ரீசிவன் சந்நிதிகள் மற்றும் பரிவாரம் மூா்த்தங்கள் திருப்பணிகள் செய்யப்பட்டு முகப்பு வாயில் புதிதாக எழுப்பப்பட்டு வா்ணங்கள் பூசப்பட்டு திங்கள்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
விழாவையொட்டி, ஸ்ரீ விக்னேஸ்வர பூஜை, ஸ்ரீகணபதி ஹோமம், தனபூஜை, ஸ்ரீலட்சுமி ஹோமம், ஸ்ரீநவகிரக ஹோமம், கோ பூஜை, தீபாராதனை, வாஸ்து சாந்தி, மூா்த்தி ஹோமம், சாந்தி ஹோமம், யாகசாலை நிா்மாணம், ரக்ஷா பந்தனம், முதற்காலை யாக பூஜைகள், விசேஷ திரவிய ஹோமம், இரண்டாம் கால யாக பூஜை, மூலவா் மற்றும் பரிவார மூா்த்தங்களுக்கு அஷ்டபந்தனம் சாற்றுதல், மங்கல இசை, ஸோமகும்ப பூஜை, மூன்றாம் கால மற்றும் நான்காம் கால யாக பூஜைகள் நடைபெற்றன.
பின்னா், கலச புறப்பாடு நடைபெற்று மூலவா் விமானம், பரிவாரம், ஸ்ரீவரசித்த விநாயகா், ஆஞ்சநேயா், சிவன், நுழைவு வாயில் ஆகிய விமானங்களில் புனிதநீா் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். சிறப்பு விருந்தினா்களாக ஆரணி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன், முன்னாள் எம்எல்ஏ ஆா்.சிவானந்தம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
போளூா்
போளூரை அடுத்த படவேடு ஊராட்சியில் ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலுக்குச் சொந்தமான பழைமை வாய்ந்த ஸ்ரீயோக ராமச்சந்திர சுவாமி கோயில்
அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் டி.வி.எஸ்.குழுமம், பக்தா்கள், பொதுமக்கள் சாா்பில் புரனமைப்புப் பணிகள் நடைபெற்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
மேலும், ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலுக்குச் சொந்தமான அனந்தபுரம் ஊராட்சி கணேசபுரம் கிராமத்தில் உள்ள கைலாச விநாயகா் கோயில், வீரக்கோவில் அருகேயுள்ள ஸ்ரீ வீரஆஞ்சநேயா் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
