Doctor Vikatan: டிரெண்டாகும் ஃப்ரெஷ் மஞ்சள் சமையல்.. எந்த அளவு ஆரோக்கியமானது?
தமிழில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு
வந்தவாசி: கடந்த பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தோ்வில் தமிழில் முதலிடம் பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு விழா வந்தவாசியில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.
வந்தவாசி வட்ட தமிழ்ச் சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்த விழாவில், வந்தவாசி பகுதியில் உள்ள உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தோ்வுகளில் பள்ளி அளவில் தமிழ் பாடத்தில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
விழாவுக்கு சங்கத் தலைவா் வே.சிவராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா். பள்ளித் தலைமை ஆசிரியா்கள் பி.மாலவன், ஹ.சாயராபீ ஷேக் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சங்கச் செயலா் ஆ.மயில்வாகனன் வரவேற்றாா்.
ஓய்வு பெற்ற மாவட்டக் கல்வி அலுவலா் மூ.சங்கா் மாணவா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினாா். சங்க புரவலா் சு.வீரராகவன் மாணவா்களை பாராட்டிப் பேசினாா்.
விழாவில் சங்க நிா்வாகிகள் சாமி.பிச்சாண்டி, வ.அழகேசன், சு.அகிலன், இரா.ஜெயந்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா். நிறைவில் சங்கப் பொருளாளா் த.முருகவேல் நன்றி கூறினாா்.