செய்திகள் :

பாஜக: "எங்கள் கூட்டணிக்கு ஒட்டுமொத்தமாகச் சேர்ந்து வருவார்கள்" - வானதி சீனிவாசன் உறுதி

post image

கோவை தெற்கு பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், “கோவை உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக ரயில்வே, விமான போக்குவரத்து, குறு சிறு தொழில் துறை மத்திய அமைச்சர்களை இங்கு அழைத்து வருவது போன்ற பணிகளைச் செய்து வருகிறோம். கோவை விமான நிலைய விரிவாக்கத்தின் ஆரம்பக் கட்ட பணிகள் தொடங்கியுள்ளன.

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

தேசிய விருது படைப்புத்திறன் அடிப்படையில் வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில், பிரதமர் மோடிக்கு எதிராகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் பலர் எழுதியும், பேசியும் வருகின்றனர். அவர்களும் தேசிய விருது வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

பாஜகவின் சித்தாந்தங்களை அதிமுக ஏற்றுக் கொண்டிருக்கிறது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார். அப்படியென்றால் திமுக - பாஜக கூட்டணியிலிருந்தபோது, பாஜக கருத்தியலுடன் முழுமையாக ஒத்துழைத்து கூட்டணி வைத்திருந்தார்களா எனத் திமுகவிடம் திருமாவளவன் கேட்டுச் சொல்ல வேண்டும்.

திருமாவளவன்
திருமாவளவன்

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் யாரெல்லாம் வருவார்கள் என்பதை தேசிய தலைமை அறிவிக்கும். எங்கள் கூட்டணிக்கும் கட்சிகள் வருவார்கள். வரும்போது ஒட்டு மொத்தமாகச் சேர்ந்து வருவார்கள். எங்கள் கூட்டணியில் எந்தக் குழப்பமும் இல்லை. திமுகவுக்கு எதிராகப் பலமான கூட்டணியை அமைப்பது மட்டுமே இலக்கு.

தமிழகத்தில் யாரெல்லாம் வாக்காளர்கள் என்பதற்கு தேர்தல் ஆணையம் விதிமுறைகளை வைத்துள்ளது. மும்பை, டெல்லியில் தமிழர்கள் இருக்கிறார்கள். ஒரு சில இடங்களில் தமிழர்கள் மக்கள் பிரதிநிதிகளாகவும் இருக்கிறார்கள். வாக்குரிமை பெறக் குறிப்பிட்ட ஆண்டு அந்தப் பகுதியில் குடியிருக்க வேண்டும். பிற மொழி பேசுபவர்களுக்கு வாக்குரிமை கொடுக்கக் கூடாது என்று சட்டத்தில் எங்கேயும் இல்லை.

வாக்குரிமை
வாக்குரிமை

இதில் விதிகள் மீறப்பட்டிருந்தால் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கலாம். வடமாநில தொழிலாளர்கள் மீது திட்டமிட்ட ரீதியில் வெறுப்பு கருத்துகளைப் பேசுகிற, அரசியல் பிரிவினைவாதம் பேசும் சில தலைவர்கள் இதைப் பேசுகின்றனர்.” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

"முத்துவேலர் பணத்தில் திட்டம் கொண்டுவந்தால் இன்பநிதி பெயரைக் கூட வையுங்கள்" - ஜெயக்குமார் காட்டம்!

தமிழக அரசின் திட்டங்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பெயரை வைப்பதற்கு எதிராக முன்னாள் அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகம் வழக்கு தொடுத்துள்ளார். திமுக தரப்பில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தொடங்கிய திட்டத்துக்க... மேலும் பார்க்க

புதுச்சேரி: `செவிலியர் பணிகளை கொல்லைப்புறமாக நியமிக்க ஜிப்மர் திட்டமிடுகிறது’ - எச்சரிக்கும் திமுக

புதுச்சேரியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய எதிர்கட்சித் தலைவரும், தி.மு.க அமைப்பாளருமான சிவா, ``ஒன்றிய அரசின் வழிகாட்டுதல்களுடன் கடந்த காலங்களில் சிறப்பாக செயல்பட்டு வந்த ஜிப்மர் நிர்வாகம், தற்போதைய... மேலும் பார்க்க

வேலூர்: குண்டும், குழியுமான சாலையில் உருண்டு போராட்டம் நடத்திய கவுன்சிலர் - மேயருடன் வாக்குவாதம்

வேலூர் மாநகராட்சி 49-வது வார்டு கவுன்சிலர் லோகநாதன். சுயேட்சையாக வெற்றிப்பெற்ற இவர், தற்போது அ.தி.மு.க ஆதரவுடன் செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில், தன் வார்டுக்குட்பட்ட தொரப்பாடி பகுதிகளில் சாலை, கால... மேலும் பார்க்க

'திரைப்புகழ் இருப்பதால் அவருக்கான வெளிச்சம் அதிகமாக இருக்கிறது, ஆனா.!'- விஜய்யை சாடிய சீமான்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று( ஆகஸ்ட் 5) செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். அதில் தவெக தலைவர் விஜய்யை மறைமுகமாக சாடிப் பேசியிருக்கிறார். "திரைப்புகழ் இருப்பதால் அவருக்கான வ... மேலும் பார்க்க

J&K : 370 ரத்து செய்யப்பட்டு 6 ஆண்டுகள் - நடந்த மாற்றங்கள் என்ன? எப்படி இருக்கிறது ஜம்மு காஷ்மீர்?

அரசியலமைப்பின் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டு, ஜம்மு-காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக (UT) மறுசீரமைக்கப்பட்டு ஆறு ஆண்டுகள் முடிவடைகிறது.மற்ற மாநிலங்களுடன் ஜம்மு & காஷ்மீர் நெருக்காம... மேலும் பார்க்க